புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்த புதிய டொயோட்டா யாரிஸ் கார் முன்பதிவில் நல்ல துவக்கத்தை பெற்றிருக்கிறது. இதுவரை 5,000 பேர் புதிய டொயோட்டா யாரிஸ் காரை முன்பதிவு செய்துள்ளனர்.

By Saravana Rajan

சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்த புதிய டொயோட்டா யாரிஸ் கார் முன்பதிவில் நல்ல துவக்கத்தை பெற்றிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புத்தம் புதிய யாரிஸ் காரை டொயோட்டா கார் நிறுவனம் களமிறக்கி உள்ளது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட சிறந்த மாடல்கள் உள்ள இந்த செக்மென்ட்டில் டொயோட்டா நிறுவனம் அதிக சவால்களை எதிர்கொண்டு யாரிஸ் காரை களமிறக்கி உள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

போட்டியாளர்களை எதிர்கொள்வதற்காக சில யுக்திகளை டொயோட்டா கையாண்டுள்ளது. பேஸ் மாடலிலேயே புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏராளமான சிறப்பம்சங்களை சேர்த்தது.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

அத்துடன், ரூ.8.75 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்தது. அத்துடன், அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கியது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக மாறி இருக்கிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

ஹோண்டா சிட்டி கனவோடு இருந்த பலரையும், தனது சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி விலையால் தன்பால் ஈர்த்துள்ளது புதிய டொயோட்டா யாரிஸ். இதற்கு கைமேல் பலனாக, இதுவரை 5,000 பேர் டொயோட்டா யாரிஸ் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாங்குவது தொடர்பாக, டீலரை தொடர்பு கொண்டு விசாரணை செய்துள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

முன்பதிவு 5,000ஐ கடந்துள்ளதால், தற்போது புதிய டொாயோட்டா யாரிஸ் காரின் சில வேரியண்ட்டுகளுக்கு 2 மாதங்கள் வரை காத்திருருப்பு காலம் நிலவுகிறது. முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருப்பதால், வரும் நாட்களில் காத்திருப்பு காலம் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது!

இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களுக்கு அடுத்து, வரும் மாதங்களில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையில் புதிய யாரிஸ் செடான் காரும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் விற்பனையில் ஹோண்டா கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி டொாயோட்டா 5வது இடத்திற்கு முன்னேறியது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 21, 2018, 12:18 [IST]
English summary
Toyota Yaris Gets 5,000 Bookings
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+