2018 ஆட்டோ எக்ஸ்போ: ஆர்பரிக்கும் அம்சங்களோடு புதிய டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போ: ஆர்பரிக்கும் அம்சங்களோடு புதிய டொயோட்டா யாரிஸ் கார் அறிமுகம்..!!

By Azhagar

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா நிறுவனம் யாரிஸ் காரை காட்சிப்படுத்தியது. காம்பேக்ட் செடான் காரான இது இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது.

புதிய டொயோட்டா யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

கிரேக்க புராணத்தில் அழகு மற்றும் ஆற்றலுக்கு வணங்கப்படும் பெண் கடவுள் தான் சாரிஸ். அதை மாற்றி யாரிஸ் என்ற பெயரில் புதிய காம்பேக்ட் செடான் மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது டொயோட்டா.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

இந்தியாவில் பிரபலமாகி வரும் காம்பேக்ட் செடான் செக்மென்டை குறிவைத்து விற்பனைக்கு வந்துள்ள கார் தான் இந்த டொயோட்டா யாரிஸ்.

இந்த செக்மென்டில் இந்தியாவை கலக்கி வரும் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் ஆகிய கார்களுக்கு சரிநிகர் போட்டியாக இந்த கார் அறிமுகமாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

1.5 லிட்டர் பெட்ரோல் விவிடி-ஐ எஞ்சின் தேர்வில் மட்டுமே டொயோட்டா யாரிஸ் கார் இந்தியாவில் கால்பதிக்கிறது.

107 பிஎச்பி பவர்,140 என்.எம் டார்க் திறனை வழங்கும் இந்த கார் முன்பக்க வீல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

டொயோட்டா நிறுவனம் யாரிஸ் காரை கோலபல் பி பிளாட்ஃபார்மின் கீழ் தயாரித்துள்ளது. 4115 மிமீ நீளம், 1700 மிமீ அகலம், 1475 மிமீ உயரம் கொண்ட இந்த கார் 2500 மிமீ வீல்பேஸை பெற்றுள்ளது.

இந்தியாவின் சாலைகளில் சிறப்பான இயக்கத்திற்காக யாரிஸ் காரை டொயோட்டா சற்று உயரமாக தயாரித்துள்ளது. இந்த காரின் டயர் 15 இஞ்ச் அளவில் உள்ளது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
வடிவமைப்பு & அம்சங்கள்

வடிவமைப்பு & அம்சங்கள்

இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமானாலும், ஆசியாவின் பல நாடுகளில் யாரிஸ் கார் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. நம் நாட்டில் வெளிவரும் யாரிஸ் கார் மூன்றாவது தலைமுறை மாடலாகும்

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

ஸ்போர்ட் தரத்திலான முகப்பு விளக்குகள், பெரிய க்ரில் மற்றும் எல்.இ.டி திறன் பெற்ற பகல்நேர விளக்குகள் ஆகியவை யாரிஸ் காரின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

அதேபோல காரின் பின்பக்கத்தில் உள்ள பம்பர் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் சுழலக்கூடிய ஃபாக் விளக்குகள் உள்ளன. இதனால் டொயோட்டா யாரிஸ் காரின் ரியர் பகுதியும் வசீகரிக்கிறது.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

காரின் பக்கவாட்டு பகுதியில் 15 இஞ்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பின்பகுதியில் மூடப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் செதுக்கப்பட்ட பூட் லிட்டு ஆகியவை உள்ளது.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

முற்றிலும் உயர் ரக லெதரை கொண்ட இருக்கை, பேடில் ஷிஃப்ட்டர்ஸ் மற்றும் சிறியளவிலான தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட்டிக் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வேன்ட் ஆகியவை டொயோட்டா யாரிஸ் காரின் உட்புற பகுதியில் கவனமீர்க்கின்றன.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

பவர் டிரைவர் சீட், 7 ஏர்பேகுகள், கூரை வழியே காற்று செல்ல வழிவிடும் ஏர் வென்ட்ஸ், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், எல்லா சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆகியவை டொயோட்டா யாரிஸ் காரின் பாதுகாப்பு அம்சங்கள்.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

இந்தியாவிற்கான காம்பேக்ட் செடான் செக்மென்டில் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்கள் சிறந்த விற்பனை திறனை பெற்று வருகின்றன.

டொயோட்டா புதிய யாரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்..!!

அதற்கு இணையான போட்டியாளராக யாரிஸ் காரை களமிறக்குகிறது டொயோட்டா. இருந்தாலும் யாரிஸ் காரில் டீசல் தேர்வு எஞ்சின் இல்லாதது, இதற்கான விற்பனை திறனை பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2018, 18:54 [IST]
English summary
Read in Tamil: Auto Expo 2018 Toyota Yaris Unveiled. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+