டொயோட்டா யாரீஸ் கார் Vs. ஹோண்டா சிட்டி கார் : வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், மைலேஜ் உள்ளிட்ட முழு தகவல்

Written By:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா நிறுவனம் புதிய யாரீஸ் செடான் காரை காட்சிப்படுத்தியது. தற்போது இதற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

இந்தாண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கார் டொயோட்டாவின் எட்டியோஸ் மற்றும் கோரல்லா செடான் மாடலுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடலாக உள்ளது.

இந்தியாவில் யாரீஸ் கார் வெளியான பிறகு ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் கார்களுக்கு விற்பனையில் சரிநிகர் போட்டியை உருவாக்கவுள்ளது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

டொயோட்டா யாரீஸ் கார் பல மாடல்களுக்கு போட்டியாக இருந்தாலும், இது ஹோண்டா சிட்டி மாடலுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் டொயோட்டா யாரீஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களின் வடிவமைப்பு, எஞ்சின், சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

15மிமீ நீளம் கொண்ட டொயோட்டா யாரீஸ் கார், அளவில் ஹோண்டா சிட்டி மாடலை விட சிறியளவில் உள்ளது. தொடர்ந்து வீல்பேஸ் அளவிலும் சிட்டி மாடலை விட 50மிமீ குறைந்துள்ளது யாரீஸ் கார்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

தொடர்ந்து ஹோண்டா சிட்டி மாடலை விட டொயோட்டா யாரீஸ் கார் 20மிமீ குறைவான உயரத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

35மிமீ அகலம் பெற்றுள்ள இந்த யாரீஸ் காரின் பின் இருக்கையில் 3 பயணிகள் வரை சவுரியமாக உட்காரலாம்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஹோண்டா சிட்டியை விட யாரீஸ் கார் சற்று உயரம் மற்றும் நீளம் குறைவாக இருந்தாலும், இதனுடைய அகலம் சற்று பெரிதாக உள்ளது ஆறுதல் அளிக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரூஃப்-மவுண்டட் ஏசி வென்ட்ஸ், முன்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் உடல்மொழியால் கட்டுப்படுத்தும் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் மிக அம்சமாக தயாராகியுள்ளது டொயோட்டா யாரீஸ்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா யாரீஸ் கார்களில் மின்சாரத்தால் இயங்கும் சன்ரூஃப் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக டொயோட்டா யாரீஸ் கார் சிட்டியை விட கூடுதல் விலை பெறும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

டொயோட்டா யாரீஸ் காரில் 7 ஏர்பேகுகள், ஏபிஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன. இதுதவிர பார்க்கிங் சென்சார் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற தேவைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஹோண்டாவின் சிட்டி செடான் மாடலில் 6 ஏர்பேகுகள், இபிடி உடன் கூடிய ஏபிஸ், ISOFIX இருக்கை, எஞ்சின் இம்மொபைலைஸர் மற்றும் தானியங்கி திறன் பெற்ற வைபர்கள் உள்ளன.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

பாதுகாப்பு கட்டமைப்புகளில் இந்த இரண்டு கார்களையும் ஒப்பிடும் போது, டொயோட்டா யாரீஸ் முன்னிலை பெறுகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட அப்டேட்டுகளும் ஹோண்டா சிட்டி காரில் இடம்பெறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா சிட்டி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் இடம்பெற்றிருக்க, டொயோட்டா யாரீஸ் வெறும் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வெளிவருகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஏஸ்பிரேடட் பெட்ரோல் எஞ்சின் கொண்ட யாரீஸ் காரின் செயல்திறன் ஹோண்டா சிட்டி காரை விட குறைவாகவே உள்ளது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

யாரீஸ் பெட்ரோல் எஞ்சின் கார் 107 பிஎச்பி பவர் மற்றும் 140 என்.எம் டார்க் திறனை வழங்கும். அதேபோல சிட்டி பெட்ரோல் மாடல் 118 பிஎச்பி பவர் மற்றும் 145 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஆனால் டொயோட்டா நிறுவனம் யாரீஸ் காரில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளை வழங்குகிறது. இதன்படி ஹோண்டா 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்டெப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வழங்குகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

கியர்பாக்ஸ் தேவைகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டொயோட்டா யாரீஸ் கார், சிட்டி காரை விட நல்ல மைலேஜை வழங்க அதிக வாய்ப்புள்ளது.

விலை

விலை

செடான் விற்பனையில் முன்னிலை பெறவேண்டி டொயோட்டா நிறுவனம் யாரீஸ் காருக்கு வேரியன்டுகளின் படி ரூ. 8.5 லட்சம் முதல் ரூ. 13.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யலாம் என தெரிகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஆனால் மறுமுனையில் ஹோண்டா சிட்டி கார் ரூ. 8.7 லட்சம் முதல் ரூ. 13.7 லட்சம் வரை சிட்டி கார்களின் வேரியன்ட் மாடலுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

தோற்றப்பொலிவில் டொயோட்டா யாரீஸ் கார் ஹோண்டா சிட்டி மாடலை விட சற்று குறைவுதான். இருந்தாலும் யாரீஸ் கார் பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்தை தொந்தரவு இல்லாமல் வழங்கும்.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

தொடர்ந்து டொயோட்டா என்பது தரம், நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலங்களுக்கு பெயர் போன நிறுவனம். இதில் ஹோண்டா சமீப காலங்களில் சறுக்கல்களை சந்தித்து வருகிறது.

டொயோட்டா யாரீஸ் Vs. ஹோண்டா சிட்டி கார்; முழு தகவல்கள்..!!

ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் செயல்திறனில் அதிக வலைமையோடு இருந்தாலும், அதற்கான போட்டி மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் போது, கார்களுக்கான விலையை நிர்ணயப்பத்தில் ஹோண்டா கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Read in Tamil: Toyota Yaris Vs. Honda City Comparison Design, Specifications, Features, Mileage. Click for Detail...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark