கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

மாருதி சுசூகி நிறுவனம் தனது ஸ்விப்ட், டிசையர், ப்ரீஸா உள்பட அனைத்து கார்களுக்கும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) என்ற பாதுகாப்பு டிவைஸை வழங்குகிறது. டிபிஎம்எஸ் எப்படி வேலை செய்கிறது

By Arun

மாருதி சுசூகி நிறுவனம் தனது ஸ்விப்ட், டிசையர், ப்ரீஸா உள்பட அனைத்து கார்களுக்கும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) என்ற பாதுகாப்பு டிவைஸை வழங்குகிறது. டிபிஎம்எஸ் எப்படி வேலை செய்கிறது? அதன் மூலம் விபத்துக்களை எப்படி தவிர்க்கலாம்? என்பது தொடர்பான விரிவான தகவல்களை பார்க்கலாம்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

டயர் வெடித்து கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கார் டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதியது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் டயர் வெடித்ததால், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்திலும் 6 பேர் மரணம் அடைந்தனர்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

இப்படி கொத்து கொத்தாய் உயிர்களை பலி வாங்கிய மேற்கண்ட 2 விபத்துக்களும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பது டயர் வெடிப்புதான். காற்றின் அழுத்தம் சரியான அளவில் இல்லாத சூழ்நிலைகளில் வாகனங்களின் டயர்கள் வெடித்து விடுகின்றன.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

குறிப்பாக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும்போதுதான், திடீரென டயர்கள் வெடித்து விடுகின்றன. இதனால் கட்டுப்பாட்டை இழந்து விடும் வாகனங்கள், தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கி, பல உயிர்களை ஆட்கொண்டு விடுகின்றன.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

டிபிஎம்எஸ்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) இந்த பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும். வாகனங்களுக்கான பாதுகாப்பில் டி.பி.எம்.எஸ் டிவைஸ்களின் பங்கு இன்றியமையாதது.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

மாருதி சுசூகி கார் நிறுவனமானது தற்போது இந்த டிவைஸ்களை, அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரிஸாக வழங்குகிறது. இதன் விலை 12,990 ரூபாய்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

புதிய ஸ்வீப்ட், டிசையர், ப்ரிஸா உள்பட மாருதி சுசூகியால் விற்பனை செய்யப்பட்ட ஏறத்தாழ அனைத்து கார்களிலும், இந்த டிவைஸை, அந்த நிறுவனத்தின் டீலர்கள் பொருத்தவுள்ளனர்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

எப்படி வேலை செய்கிறது?

டிபிஎம்எஸ் டிவைஸ் பொதுவாக 5 சென்சார்களை கொண்டது. ஸ்பேர் சக்கரம் உள்பட காரின் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு சென்சார் பொருத்தப்படும். டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை கணக்கிடும் பணியை இந்த சென்சார்கள் செய்கின்றன.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

பின்னர் டயர்களில் உள்ள காற்றின் அழுத்தம் குறித்த தகவல்களை, டேஸ்போர்ட் இன்ஸ்ட்ரூமெண்டல் பேனலில், அந்த சென்சார்கள் தெரியப்படுத்தும். ப்ளூடூத் டெக்னாலஜி மூலமாக, இந்த பணியை அந்த சென்சார்கள் செய்யும்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

இதன்மூலமாக காரின் டிரைவர்கள், டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை, சீராக கண்காணித்து, அதற்கு ஏற்றபடி காற்றின் அழுத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

டயர்களில் உள்ள காற்றின் அழுத்தம் குறிப்பிட்ட எல்லையை கடந்து செல்லும்போது, குறிப்பாக மிக அதிக வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கையில், அப்படி நிகழ்ந்தால், டிரைவருக்கு உடனடியாக அந்த சென்சார்கள் எச்சரிக்கையை வழங்கி விடும்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

இதன்மூலம் டிரைவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, டயர்களை கூல் ஆக்கிய பின்பு, மீண்டும் பயணத்தை தொடரலாம்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

ஒருவேளை டயரில் உள்ள காற்றின் அழுத்தம் வழக்கத்தை விட குறைவாக சென்று விட்டாலும் கூட, டிரைவரால் அதனை சரியான அளவுக்கு கொண்டு வர முடியும்.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

டயரின் உள்ளே இருந்து மிக துல்லியமான ரீடிங்குகளை அந்த சென்சார்கள் வழங்குகின்றன. எனவே பாதுகாப்பை அதிகரித்து கொள்ள வேண்டுமானால், டிபிஎம்எஸ் டிவைஸ்களை பொருத்தி கொள்வதே சிறந்தது.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

இந்தியாவிலேயே மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால் பிற நிறுவனங்களின் பாதுகாப்பு அம்சங்களோடு ஒப்பிட்டால், மாருதி சுசூகி நிறுவனம் பின்தங்கி விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் நிறுவன கார்களின் பாதுகாப்பை அதிகரிப்பதில் மாருதி சுசூகி தற்போது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?

மாருதி சுசூகி கார்களுக்கு மட்டுமல்ல. அனைத்து வாகனங்களுக்கும் டி.பி.எம்.எஸ். டிவைஸை பொருத்தி கொள்ள முடியும். மார்க்கெட்டில் பல டி.பி.எம்.எஸ். யூனிட்கள் கிடைக்கின்றன. உங்கள் காருக்கு பொருத்தமான டி.பி.எம்.எஸ். யூனிட்டை தேர்வு செய்ய நீங்கள் இன்டர்நெட்டின் உதவியை நாடலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 18, 2018, 19:15 [IST]
English summary
Tyre pressure monitoring system now offered on new Maruti Swift, Dzire, Brezza & more.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+