நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

ஓலா, உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்கள் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

ஆனால் ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோரால் பரவலாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக டாக்ஸிகளில் தனியாக செல்லும் பெண்கள் மிகுந்த அச்ச உணர்வுடன்தான் பயணித்து வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

ஏனெனில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் உபேர் டாக்ஸியில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உபேர் டாக்ஸியின் டிரைவரான சிவகுமார் யாதவ், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. முன்னதாக உபேர் டாக்ஸியின் டிரைவர் சிவகுமார் யாதவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

இந்த சம்பவத்திற்கு பின்தான், டாக்ஸியில் தனியாக பயணிக்க பெண்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. சிவ குமார் யாதவ் என்ற அந்த டிரைவரால் உபேர் நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயர் உண்டானது. உபேர் நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அந்த கலங்கத்தை சந்தோஷ் என்ற டிரைவர் தற்போது துடைத்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

பிரியஷ்மிதா குஹா என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன் தன் தாயாருடன் உபேர் டாக்ஸியில் பயணம் செய்தார். அந்த டாக்ஸியை சந்தோஷ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் தங்கியிருந்த இடத்திற்கு சரியாக 1 மணியளவில் டாக்ஸி சென்று சேர்ந்தது.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

ஆனால் அப்போது அந்த இடத்தின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் பரிதவிப்புக்கு ஆளாயினர். அப்போது நள்ளிரவு 1 மணியாகியிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், 2 பெண்களையும் தனியாக விட்டு செல்ல டிரைவர் சந்தோசுக்கு மனம்வரவில்லை.

எனவே கேட் திறக்கப்படும் வரை, அவர்களின் பாதுகாப்பிற்காக டிரைவர் சந்தோஷ் அங்கேயே இருந்தார். சுமார் 2.30 மணியளவில் அதாவது ஒன்றரை மணி நேரம் கழிந்த பிறகே கேட் திறக்கப்பட்டது. அதுவரை டிரைவர் சந்தோஷ் அங்கேயேதான் இருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

2 பெண்களும் உள்ளே சென்ற பின்புதான் டிரைவர் சந்தோஷ் கிளம்பி சென்றார். முன்னதாக அடுத்த பயணத்திற்கு அவருக்கு அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் 2 பெண்களை நள்ளிரவில் தனியாக விட்டு விட்டு வர முடியாது என்பதால், அந்த அழைப்புகளை சந்தோஷ் நிராகரித்து விட்டார்.

நடந்த சம்பவங்களை எல்லாம் பிரியஷ்மிதா குஹா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் (ஆனால் எந்த இடம் என்பதை குறிப்பிடவில்லை). உடனே அந்த டிவிட் வைரலானது. தனது வருமானத்தை பெரிதாக எண்ணாமல், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டதால், சந்தோசுக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கின.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

இதனிடையே சமீப காலமாக #MeToo பரப்புரையின் கீழ் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை எல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

அப்படிப்பட்ட சூழலில், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த டிரைவர் சந்தோஷின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் வெளியிட்ட தகவல் உபேர் நிறுவனத்தையும் சென்றடைந்தது.

உடனடியாக டிரைவர் சந்தோஷை அழைத்து பாராட்டியது உபேர் நிறுவனம். உபேர் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனது துர்கா பூஜை விழா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..

2 பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் அவர்களை பாதுகாத்த டிரைவர் சந்தோசுக்கு தற்போது நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Uber Driver Rewarded For Save 2 Female Passengers At Midnight. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X