டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டிய உபேர் மொபைல் அப்ளிகேஷன்: காரை புக் செய்தவர் அதிர்ச்சி!

By Saravana Rajan

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உபேர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் அன்றாட தேவைகளாகிவிட்டன. இந்த கார்களை முன்பதிவு செய்து அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்கு வந்து பிக்கப் செய்யும் நிலை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

இந்த சூழலில் உபேர், ஓலா உள்ளிட்ட டாக்சி சேவைகள் குறித்த அவ்வப்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வருவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. அதுபோன்ற ஒரு பரபரப்பு விஷயம் இப்போது வெளியாகி உள்ளது.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

மும்பையை சேர்ந்த ஹூசேன் ஷேக் என்பவர் அண்மையில் உபேர் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த அதிர்ச்சியான விஷயம்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

மொபைல்போனில் உபேர் டாக்சியை முன்பதிவு செய்தவுடன், காருக்காக காத்திருந்துள்ளார் ஹூசேன். அப்போது, புக்கிங் செய்தவுடன் கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை காட்டும் நிகழ்நேர வரைபடத்தை பார்த்துள்ளார்.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

அதில், அவர் முன்பதிவுக்கு ஒதுக்கப்பட்ட மாருதி வேகன் ஆர் கார் அரபிக் கடலில் நிற்பதாக காட்டி இருக்கிறது. இதனை கண்டு அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, இதனை விடவில்லை ஹூசேன்.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

உடனடியாக, அந்த வரைபடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு போட்டுள்ளார்.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

அந்த பதிவுக்கு தலைப்பாக, அந்த காரின் டிரைவர் அஸ்லாம் பெயரை தனது பதிவில் குறிப்பிட்டு, அவர் நீர்மூழ்கி கப்பலில் வந்து கொண்டிருப்பதாகவும் ஹாஸ்யமாக கமெண்ட் அடித்துள்ளார்.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

இந்த பதிவுதான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பதிவுக்கு 2,100 பேர் லைக் செய்துள்ளனர். மேலும், 5,467 பேர் இதுவரை அந்த பதிவை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், பலர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

டாக்சி நடுக்கடலில் நிற்பதாக காட்டி உபேர் மேப்: புக் செய்தவர் அதிர்ச்சி!

உபேர், ஓலா டாக்சி டிரைவர்கள் குறித்த புகார் அல்லது அவர்களது செயல்கள் குறித்த செய்திகள்தான் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால், உபேர் டாக்சியின் மேப் தந்த தவறான தகவலால் இப்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Facebook

Tamil
English summary
Uber Taxi Location Was At The Arabian Sea; Customer Shares Screenshot on Facebook.
Story first published: Wednesday, February 21, 2018, 11:48 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more