குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

பவர்புல் இன்ஜின் திறனுடனும், லக்ஸரியான வசதிகளுடனும் பல அதிநவீன கார்கள் இன்று வந்து விட்டாலும் கூட, ஒரு சில கார்களை என்றென்றைக்கும் மறக்க முடியாது.

By Arun

பவர்புல் இன்ஜின் திறனுடனும், லக்ஸரியான வசதிகளுடனும் பல அதிநவீன கார்கள் இன்று வந்து விட்டாலும் கூட, ஒரு சில கார்களை என்றென்றைக்கும் மறக்க முடியாது. அதிலும் அம்பாஸிடர் போன்ற ஒரு சில கார்கள் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட கார்கள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர்

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் கடந்த 1958ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. எனினும் கடந்த 2014ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த பிரபலமான கார் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். இந்த காரை தெரியாதவர்கள் என யாரும் இருக்கவே முடியாது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரை மையமாக கொண்ட மோரிஸ் மோட்டார்ஸ் லிமிடெட் கம்பெனியால் உருவாக்கப்பட்ட மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரீஸ் III காரை அடிப்படையாக கொண்டதுதான் அம்பாஸிடர். இந்தியாவில் அதிக அங்கீகாரம் பெற்ற கார் என்றால், நிச்சயமாக அது அம்பாஸிடர்தான்.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

சுதந்திரத்திற்கு பிறகு ஏறக்குறைய ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) கழித்து, இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கார் அம்பாஸிடர். இந்தியாவில் ஏறத்தாழ 50 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த ஒரே காரும் அம்பாஸிடர் மட்டுமே. இந்திய பிரதமர்களின் அதிகாரப்பூர்வ காராகவும் அம்பாஸிடர் ஒரு காலத்தில் இருந்தது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

பியட் பிரீமியர் பத்மினி

1970 முதல் 1998ம் ஆண்டு வரை பியட் பிரீமியர் பத்மினி கார் இந்தியாவில் விற்பனையில் இருந்தது. பியட் நிறுவனத்திடம் பெற்ற லைசென்ஸ் மூலம் பிரீமியர் ஆட்டோமொபைல் நிறுவனத்தால் இந்த கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

ஆரம்பத்தில் இந்த கார் என்னவோ பியட் 1100 டிலைட் என்ற பெயரில்தான் மார்க்கெட் செய்யப்பட்டது. ஆனால் 1970களின் தொடக்கத்தில் பியட் பிரீமியர் பத்மினி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மிக நீண்ட காலமாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு இருந்த ஒரே மாற்று பியட் பிரீமியர் பத்மினிதான்.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

ஆனால் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை காட்டிலும், பியட் பிரீமியர் பத்மினி அதிக சக்தி வாய்ந்தது. கார் ரேலி, ரேஸ் உள்ளிட்ட விஷயங்களுக்கும் கூட மக்கள் இந்த காரை பயன்படுத்தினார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் இதன் திறனை.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

ஹிந்துஸ்தான் கான்டெஸா

ஹிந்துஸ்தான் கான்டெஸா கார் கடந்த 1984ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. ஏறக்குறைய 2002ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் கான்டெஸா, விவிஐபிக்களுக்கான காராக கருதப்பட்டது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

இந்த காரில் சக்தி வாய்ந்த இசுசூ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏர் கண்டிஷனிங் என எண்ணற்ற வசதிகளை ஹிந்துஸ்தான் கான்டெஸா உள்ளடக்கியிருந்தது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

மாருதி ஜிப்ஸி

ஹேண்ட்ஸம் கார் என பெயரெடுத்த மாருதி ஜிப்ஸி, இந்தியாவில் கடந்த 1985ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. ஆனால் இன்றும் கூட மாருதி ஜிப்ஸி கிடைக்கிறது. நமது நாட்டின் ராணுவம் உள்பட பல்வேறு பாதுகாப்பு படைகளிலும் மாருதி ஜிப்ஸி சேவையாற்றியுள்ளது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

ரோவர் மாண்டிகோ

1991ம் ஆண்டு ரோவர் மாண்டிகோ கார் இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. செடான் மற்றும் ஸ்டேஷன் வேகன் என 2 பாடி வேரியண்ட்களில் ரோவர் மாண்டிகோ கார் கிடைத்தது. ஆனால் இரண்டு மாடல்களுமே ப்ளாப். இதனால் இந்த காரை யாரும் சாலைகளில் அதிகம் பார்த்திருக்க முடியாது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

டாடா சுமோ

1994ம் ஆண்டில் டாடா சுமோ லான்ச் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இந்தியாவின் பிரபலமான எம்யூவி காராக இது இருந்தது. 1994 மற்றும் 1997க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டாடா சுமோ கார்கள் விற்பனையானது. கடந்த 2004ம் ஆண்டு வரை டாடா சுமோ விற்பனையில் இருந்தது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

டாடா எஸ்டேட்

டெல்கோ (தற்போது டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் முதல் பாசஞ்சர் காரான எஸ்டேட் கடந்த 1992ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. ஏர்கான், பவர் ஸ்டியரிங், பவர் விண்டோஸ், கேசட் பிளேயர், டேக்கோ மீட்டர் என டாடா எஸ்டேட் காரில் இடம்பெற்றிருந்த வசதிகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

டாடா எஸ்டேட் காரில், நான்-டர்போசார்ஜ்டு 1.9 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 68 பிஎஸ் பவரை உருவாக்கும். அதிக விலை மற்றும் நம்பகத்தன்மை இல்லாதது ஆகியவற்றின் காரணமாக டாடா எஸ்டேட் கார் இந்தியாவில் அதிகம் பிரபலமாகவில்லை.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

மஹிந்திரா ஆர்ம்டா

மஹிந்திரா ஆர்ம்டா கார், கடந்த 1993ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. இடையில் 1998ம் ஆண்டில் அதிக லக்ஸரியான ஆர்ம்டா கிராண்ட் காரையும் மஹிந்திரா அறிமுகம் செய்தது.

குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த இந்த கார்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

டாடா சியாரா

1990களின் ஸ்டைலிஷான கார் டாடா சியாரா. பல பிரீமியம் வசதிகளையும், பவர்புல் இன்ஜினையும் கொண்டது டாடா சியாரா. இந்தியாவில் ரீ லான்ச் செய்யப்பட வேண்டும் என பலரும் விரும்பும் கார்களில் டாடா சியாராதான் முதன்மையானது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Unforgettable cars of india. Read in tamil
Story first published: Saturday, June 30, 2018, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X