பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி டீலர்களிடம் தேக்கமடையும் கார்கள்...

இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களில் கடந்த 2 மாதங்களாக கார்கள் விற்பனை ஆகாமல் தேக்க நிலையிலேயே இருக்கிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, போதுமான மழையின்மை, மக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை

இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களில் கடந்த 2 மாதங்களாக கார்கள் விற்பனை ஆகாமல் தேக்க நிலையிலேயே இருக்கிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, போதுமான மழையின்மை, மக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையே இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இதனால் ஆட்டோமொபைல் துறையில் இந்த மாதம் விற்பனை மிக மந்தமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. இதற்கிடையில் வட இந்தியாவில் இது ஷாரத் காலமாகும். இந்த காலகட்டத்தில் மக்கள் அதிக விலை மதிப்புள்ள நிலங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்க மாட்டார்கள்.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இந்தியா முழுவதும் உள்ள 5 பெரிய பயணிகள் வாகன டீலர்களிடம் நடத்திய சர்வேயின் படி மாருதி சுசூகி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சுமார் அடுத்த 45 நாட்களுக்கு ஸ்டாக் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சாதாரணமாக 25-30 நாட்களுக்கான ஸ்டாக்குகள் மட்டுமே டீலர்களிடம் இருக்கும். டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் டீலர்களிடம் தற்போது 35-40 நாட்களுக்கான ஸ்டாக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் குஜராத்தில் உள்ள அவர்களது ஆலையில் சுமார் 2,50,000 வாகனங்களை கட்டமைத்து வருகின்றனர். இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு தூண்டுதலாக அமைந்து அவர்களும் அதிக உற்பத்தியில் ஈடுபட வழிவகுத்துள்ளது. இதன் காரணமாகவே இரண்டு மாத தேக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தினரிடம் கேட்ட போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் தற்போது நடந்து வரும் பண்டிகை கால விற்பனைக்காக கார்களை ஸ்டாக் செய்ய துவங்கிவிட்டோம். இது போல் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை. இதற்கு முன்னர் பண்டிகை காலத்திற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்பாகவே ஸ்டாக் செய்ய துவங்குவோம் என்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இந்தியாவை பொறுத்தவரை மொத்தமாக கார் டீலர்களுக்கு செல்லும் கணக்கே மொத்த கார் விற்பனை கணக்காக சொல்லப்படுகிறது. டீலர்களுக்குதான் மாதம் எவ்வளவு கார்கள் விற்பனையாகிறது என்பது தெரியும்.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் மார்கெட்டில் விற்பனையாகும் கார்களில், தங்கள் கார்கள் எவ்வளவு விற்பனையாகிறது என்பதை கணக்கிடும் மார்கெட் ஷேர் நிலவரத்தில் தங்கள் நிறுவனம் நல்ல சதவீதத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதால் இன்று சுமார் 45 நாட்களுக்கான கார்கள் ஸ்டாக்கில் உள்ளது. அடுத்த மாதம் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

கடந்த ஜூலை மாதம் பயணிகள் வாகனங்களின் விற்பனை சுமார் 2.7 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 2.46 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் கேரள வெள்ளம் என சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

தற்போது டீலர்களிடம் உள்ள ஸ்டாக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிக ஸ்டாக் இருப்பது இயல்புதான். ஆனால் மிக அதிக அளவு ஸ்டாக் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு முன்பு காத்திருக்கும் காலம் என்பது இருக்கும். ஆனால் தற்போது நிலையை தலைகீழாகி டில்லியில் இந்த கார்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி என வழங்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

மாருதி நிறுவன டீலர்களிடம் சுமார் 45-50 நாட்களுக்கான கார்கள் ஸ்டாக்கில் உள்ளது. வழக்கமாக 20-25 நாட்களுக்கான ஸ்டாக்குகள்தான் இருக்கும். இதே போல மற்ற நிறுவனங்களும் தற்போது டீலர்களிடம் கார்களை தள்ள முயற்சித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மார்கெட்டில் நல்ல ஷேரை தக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இதற்கிடையில் தற்போது எதிர்பார்த்த அளவிற்கு கார் புக்கிங்கள் வரவில்லை என சில டீலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் மாருதி நிறுவனம் தற்போது அதை மறுத்துள்ளது. விற்பனையும் ஸ்டாக்கும் சீரான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்த நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி தேக்கமடையும் கார்கள்...

இது குறித்து ஹூண்டாய் நிறுவனம், டீலர்களிடம் பண்டிகை காலத்தை கணக்கிட்டு அதற்கு தேவையான சரக்குகளையே ஸ்டாக் வைத்திருப்பதாகவும், மேலும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் அடுத்த மாதம் புதிய காரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். டாடா நிறுவனம் இது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டது.

Most Read Articles

சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்திய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Unsold vehicles pile up at dealers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X