பெயர் மாற்றம் சர்ச்சையான நிலையில் அலகாபாத் கும்பமேளாவிற்கு அச்சுறுத்தல்... அதிரடி காட்டிய யோகி...
அலகாபாத் கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபிக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அலகாபாத் கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபிக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் (தற்போது பிரயக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் மார்ச் மாதம் 4ம் தேதி வரை, மிகவும் பிரசித்தி பெற்ற கும்பமேளா விழா நடைபெறவுள்ளது.

இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் பல்வேறு இடங்களை சேர்ந்த விஐபி மற்றும் விவிஐபிக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா விழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்த சூழலில் கும்பமேளா விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக விவாதிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 25 கோடி ரூபாய் மதிப்பில் 112 சொகுசு கார்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Recommended Video


2019 கும்பமேளா விழாவிற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபி மற்றும் விவிஐபிகளின் பாதுகாப்பிற்காகவும்தான் 25 கோடி ரூபாய் மதிப்பில் 112 சொகுசு கார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

112 கார்களுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு காரின் சராசரி விலை சுமார் 22.23 லட்ச ரூபாய் ஆகும். என்னென்ன கார்கள் வாங்கப்படவுள்ளன? என்ற விபரங்களை உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

இதன்படி உத்தரபிரதேச மாநில தோட்டக்கலை துறையின் பயன்பாட்டிற்காக 5 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, 5 மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் 7 ஹோண்டா சிட்டி என மொத்தம் 17 கார்கள் வாங்கப்படவுள்ளன. இவற்றின் மதிப்பு 2.46 கோடி ரூபாய்.

இதுதவிர கூடுதலாக 4 ஸ்கார்பியோ, 2 ஜாமர் ஃப்ரீ கார்கள், 3 புல்லட் ப்ரூஃப் (Bullet proof) டாடா சபாரி, 7 டாடா சபாரி ஸ்ட்ரோம் இஎக்ஸ் உள்பட மொத்தம் 16 கார்கள் தனியாக வாங்கப்படவுள்ளன. இவற்றின் மதிப்பு 6.30 கோடி ரூபாய்.

எஞ்சிய 79 கார்கள் 16.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படவுள்ளன. இந்த 79 கார்களிலும் ஒரு சில புல்லட் ப்ரூஃப் கார்கள் இடம்பெறவுள்ளன. ஆக மொத்தத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 112 கார்கள் வாங்கப்படவுள்ளன.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் கூறுகையில், ''கும்பமேளா விழா நெருங்கி வருகிறது. இதில், விஐபி மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அவர்களுடன் சேர்த்து கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள பக்தர்கள் அனைவருக்கும் உச்சகட்ட பாதுகாப்பை வழங்குவது என முடிவு செய்துள்ளோம். எனவே அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகதான் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 112 கார்கள் வாங்கப்படவுள்ளன. புதியதாக வாங்கப்படவுள்ள கார்களை, பழைய கார்களுக்கு பதிலாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். புதிய கார்களை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார்தான் முன்வைத்தனர்'' என்றனர்.

அலகாபாத் என்ற பெயரை கும்பமேளா விழாவை முன்னிட்டுதான் பிரயக் ராஜ் என பெயர் மாற்றம் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு உள்ளூர் உள்பட நாடு முழுவதும் ஆதரவும், வரவேற்பும் ஒரு சேர நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More from DriveSpark
புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








