ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

ஒவ்வொரு ஆண்டின் இரண்டாம் பாதியும் பண்டிகை காலம் நிறைந்த நாட்களாக இந்தியாவில் உள்ளது. இந்த கால கட்டத்தில் இந்தியர்கள் மத்தியில் வாங்கும் திறன் அதிகமாக இருக்கிறது.

By Balasubramanian

ஒவ்வொரு ஆண்டின் இரண்டாம் பாதியும் பண்டிகை காலம் நிறைந்த நாட்களாக இந்தியாவில் உள்ளது. இந்த கால கட்டத்தில் இந்தியர்கள் மத்தியில் வாங்கும் திறன் அதிகமாக இருக்கிறது. இதை கணக்கிட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதை பயன்படுத்தி கொள்ள அதிகமான கார்களை அந்த கால கட்டத்தில் தான் அறிமுகப்படுத்தும்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

அந்த வகையில் இந்தாண்டிற்கான இரண்டாம் பாதி கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. ஆண்டின் இரண்டாம் பாதி இப்பொழுது தான் துவங்கியுள்ளது என்பதால் அதிகளவில் கார்கள் அறிமுகமாவில்லை என்றாலும் இந்த மாதம் அறிமுகமாகவுள்ள கார்களை இங்கு பார்ப்போம்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

ஹோண்டா ஜாஸ் ஃபேஸ் லிப்ட்

கடந்த 2014ம் ஆண்டு முதல் ஹோண்டா நிறுவனம் தனது ஜாஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஜாஸ் காரின் பேஸ் லிப்ட் வெர்ஷனை சர்வதேச அளவில் கடந்தாண்டே வெளியிட்டது. ஆனால் இந்த கார் இந்த மாத இறுதியில் தான் இந்தியாவில் வெளியாகிறது. புதிய வரவுள்ள இந்த ஜாஸ் காரில் புதிய காஸ்மெட்டிக் அப்டேட்கள் செய்யப்ட்டுள்ளன. முகப்பு பகுதியில் உள்ள கிரில், ஹெட்லைட், பம்பர், பகல் நேர எல்இடி லைட் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

காரின் உட்பகுதியை பொருத்தவரை ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைந்த டச்ஸ்கிரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சீட்களை அகற்றும் மேஜிக் சீட், உள்ளிட்ட வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

இதன் இன்ஜின்னை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. மேலும் இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் அல்லது சிவிடி ஆட்டோமெடிக் கியர் ஆப்ஷன்கள் இதில் உள்ளது. இந்த கார் மாருதி சுஸூகி பெலேனோ, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக களம் இறங்குகிறது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் இந்த காரின் விலை சுமார் 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ்

போர்ஷே911 சிறந்த டிரைவர் சென்ட்ரிக் காராக கருதப்படுகிறது. இந்த கார் பின் பக்க இன்ஜின் உடன் ரியர் வீல் டிரைவ் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளது. பின் பக்கம் இன்ஜின் இருப்பதால் இந்த கார் பெர்பாமென்ஸ் சிறப்பாக இருக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் போல செயல்படும்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3.8 லிட்டர், ஸ்டிரைட் சிக், இன்லைன் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 686 பிஎச்பி பவரையும் 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் பிக்கப் எவ்வளவு என்றால் 2.8 நொடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டி விடும். ரியர் வீல் டிரைவாக இருப்பதால் இந்த வேகம் கிடைக்கிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

மேலும் இந்த கார் 6:47.3 என்ற கடினமான எநக்கார்டை டிராக்கில் வைத்திருக்கிறது. இந்த போட்டியில் அனைத்து ரியர் வீல் டிரைவ் கார்களுக்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. மேலும் இந்த கார் கஷ்டமைஸ்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மேலே சொன்ன ஆப்ஷன்கள் எல்லாம் சர்வதேச சந்தையில் உள்ள இந்த காரின் ஆப்ஷன்கள் இந்தியாவிலும் இந்த கார்கள் தான் வரும் என எதிர்பார்க்கலாம். வரும் ஜூலை 10ம் தேதி இந்த கார் அறிமுகாகிறது. இதன் விலை சுமார் ரூ 4 கோடி

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

ஃபெராரி போர்டோஃபினோ

அமெரிக்காவை தொடர்ந்து ஃபெராரி போர்டோஃபினோ கார் கார் இந்தியாவிற்கு வருகிறது. உலகின் மிக அழகான காராக தற்போது இந்த கார் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது 3.9 லிட்டர் டர்போ சார்ஜ் வி8 இன்ஜின் கொண்டது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

இந்த கார் 592 பிஎச்பி பவரும் 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் இரண்டு டோர்களை கொண்ட காராக இருக்கிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

இந்த கார் அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இதன் பிக்கப்பை பொருத்தவரை 3.5 நொடியில் 0-100 கி.மீ. வேகத்திற்கு செல்லும். இதில் 2+2 சீட்டர் வசதி கொண்டது. ஆனால் டிரைவர் சிட்டை தவிர மற்ற சீட்களில் குழந்தைகளுக்கு தான் சவுகரியமாக இருக்கும். இன்னும் இந்த கார் விற்பனைக்கு வரும் தேதி தெரியவில்லை. இந்த கார் விற்பனைக்கு வந்தால் இந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக்

ஜீப் காம்பஸ் கார் அந்நிறுவனம்த்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த எஸ்.யூ.வி கார், இந்த காரின் அப்டேட்டட் வெர்ஷன் இந்த மாதம் அறிமுகமாகிறது. ஆப்-ரோடு பயணத்திற்கு ஏற்ற சிறந்த கார் இது. இந்த கார் சில காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் விரைவில் விற்பனைக்க வருகிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

புதிய அப்டேட்களாக டுயல் டோன் அலாய் வீல்கள், ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் இன்ஜினை பொருத்தவரை அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 171 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இதில் 9 ஸ்பீடு ஆட்டோமெட்ரிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள கார்களில் எது சிறப்பாக இருக்கிறது?

ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக் காரை ஃபியட் நிறுவன டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ஐ வருகிறது. தற்போது புதிதாக மாற்றங்களுடன் வெளியாக இந்த ஜீப் காம்பஸ் டிரையல் ஹாக் கார் இந்த மாதமே விற்பனைக்கு வருகிறது. இதை விலை ரூ 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Upcoming Car Launches in July 2018.Read in Tamil
Story first published: Wednesday, July 4, 2018, 18:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X