பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்னும் சில நாட்களில் லான்ச் ஆகவுள்ள சூழலில், அதன் விலை விபரங்கள் தற்போதே வெளியே கசிந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்னும் சில நாட்களில் லான்ச் ஆகவுள்ள சூழலில், அதன் விலை விபரங்கள் தற்போதே வெளியே கசிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய சான்ட்ரோ காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஹூண்டாய் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகமாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.

ஆம், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார், இந்திய மார்க்கெட்டில் வரும் 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 டிரிம்களில், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் பயன்படுத்தப்படவுள்ள புதிய 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 99 என்எம் டார்க் திறனை உருவாக்க வல்லது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்படுகிறது.

மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடனும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கும். ஏஎம்டி கியர் பாக்ஸை பெறவுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய சான்ட்ரோ தட்டி செல்லவுள்ளது.

இதுதவிர சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுடனும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கவுள்ளது. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

மேனுவல் மற்றும் ஏஎம்டி என 2 மாடல்களிலும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல் வேரியண்ட்டானது ஒரு லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சான்ட்ரோ காரில், டிரைவர் சைடு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 7 வண்ணங்களில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்காக வாடிக்கையாளர் பேராவலுடன் காத்திருக்கும் சூழலில், அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அதன் விலை விபரங்கள் வெளியே கசிந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை Gaadiwaadi தளம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பேஸ் மாடலான டிலைட் 3.87 லட்ச ரூபாய் என்ற விலையிலும், டாப் மாடலான அஸ்ட்டா 5.29 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். புதிய சான்ட்ரோ காரின் விரிவான விலை பட்டியலை கீழே காணலாம்.
| Variants | Price |
| DLite | Rs 3,87,627 |
| Era | Rs 4,12,156 |
| Magna | Rs 4,40,457 |
| Magna AMT | Rs 4,97,061 |
| Sportz | Rs 4,78,193 |
| Sportz AMT | Rs 5,20,646 |
| Asta | Rs 5,29,137 |
| Magna CNG | Rs 5,00,835 |
| Sportz CNG | Rs 5,38,571 |

இதில், மேக்னா சிஎன்ஜி ரூ.5 லட்சம் என்ற விலையிலும், ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி ரூ.5.38 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி செலிரியோ, டாடா டியாகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More from DriveSpark
டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








