தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டி சாதனை படைத்த பெண் ஒருவருக்கு, மிகவும் வித்தியாசமான முறையில், நெகிழ்ச்சிகரமான பரிசு ஒன்று கிடைத்துள்ளது.

நெடுந்தூரம், நீண்ட நேரம் பயணம் செய்வது என்பது பொதுவாக அலுப்பு தட்டக்கூடிய ஒன்று. ஒரு சில பைக் பிரியர்கள் நெடுந்தூரம் பயணம் செய்வதை விரும்பினாலும் கூட, பெரும்பாலானோர் அதனை வெறுத்து ஒதுக்கவே செய்கின்றனர்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

அதையும் மீறி ஒரு வேளை நெடுந்தூரம் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், ரயில் அல்லது விமான பயணங்களைதான் அத்தகைய நபர்கள் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக காரில் பயணம் செய்வதை அவர்கள் பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

இப்படிப்பட்ட சூழலில், ஒரு நபர் தனது காரில், தினசரி அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொலைவு பயணித்து விட முடியும்? 200 கிலோ மீட்டர்கள்? 300 கிலோ மீட்டர்கள்? அல்லது 400 கிலோ மீட்டர்கள்?

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

சரி, இவ்வளவு தொலைவை காரில் ஒரு சில நாட்களுக்கு சலுப்பு தட்டாமல் பயணிக்க முடியும். ஆனால் நாள்தோறும் காரில் இவ்வளவு தொலைவு பயணித்து கொண்டே இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு நிச்சயமாக முடியாது என்பதே பலரது பதிலாக இருக்கும்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

ஆனால் நிச்சயமாக முடியும் என ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார். இத்தனைக்கும் அவர் ஒரு பெண். அந்த பெண் தனது காரை வெறும் 5 ஆண்டுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மைல்கள் ஓட்டியுள்ளார்!! ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது மைல்கள்தான்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

இதுவே கிலோ மீட்டர் ரீதியில் கணக்கிட்டால், அந்த பெண் தனது காரை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர்கள் ஓட்டியுள்ளார்!! ஒரு நபர் தன் ஒட்டுமொத்த வாழ்நாள் முழுவதும் சேர்த்தால் கூட, இவ்வளவு அதிகமான கிலோ மீட்டர்கள் காரை ஓட்ட முடியுமா? என்பது சந்தேகமே.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

நிலைமை இப்படி இருக்க, அமெரிக்காவை சேர்ந்த ஃபாரா ஹெயின்ஸ் என்ற பெண்தான், தனது 2013ம் ஆண்டு மாடல் ஹூண்டாய் எலான்ட்ரா காரை, கடந்த 5 ஆண்டுகளில், ஒரு மில்லியன் மைல்களுக்கும் அதிகமாக ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

அதாவது ஒரு ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சம் மைல்கள் அவர் கார் ஓட்டியுள்ளார். இதுவே ஒரு நாளுக்கு சராசரியாக என கணக்கிட்டால், சுமார் 548 மைல்கள் அவர் கார் ஓட்டியுள்ளார் (கிலோ மீட்டர்களில் கணக்கிட்டால் இன்னும் அதிகமாக வரும்).

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

அமெரிக்காவில் டிரைவர் வேலை செய்யும் ஒருவர் ஒரு ஆண்டுக்கு சராசரியாக வெறும் 14 ஆயிரம் மைல்கள் மட்டுமே வாகனத்தை இயக்குகிறார். ஆனால் ஃபாரா ஹெயின்ஸ் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 2 லட்சம் மைல்கள் காரை ஓட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

காரின் இன்ஜினுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆயில் மாற்றுவதை ஃபாரா ஹெயின்ஸ் வழக்கமாக வைத்துள்ளார். இந்த அளப்பரிய சாதனையை படைத்த ஃபாரா ஹெயின்சுக்கு பரிசு ஒன்றினை வழங்க ஹூண்டாய் நிறுவனம் விரும்பியது.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

இதன்படி புத்தம் புதிய சிகப்பு நிற 2018ம் ஆண்டு மாடல் எலான்ட்ரா காரை, ஃபாரா ஹெயின்சுக்கு பரிசாக வழங்கியுள்ளது ஹூண்டாய் நிறுவனம். அதுவும் ஹூண்டாய் நிறுவனம் மிகவும் வித்தியாசமான முறையில், தனது பரிசை ஃபாரா ஹெயின்சுக்கு வழங்கியிருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

ஃபாரா ஹெயின்ஸ் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதன்படி பார்சல் ஒன்றை டெலிவரி செய்வதற்காக ஹூண்டாய் நிறுவனத்தின் ஒர்க் ஷாப்பிற்கு ஃபாரா ஹெயின்ஸ் சமீபத்தில் சென்றிருந்தார்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

அப்போது அவர் கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து பார்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டார். இதன்படி பார்சலை பிரித்து பார்த்த, ஃபாரா ஹெயின்சுக்கு பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஆம், அதற்குள் புதிய எலான்ட்ரா காரினுடைய சாவி ஒன்று இருந்தது.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

அதைபார்த்து ஃபாரா ஹெயின்ஸ் ஆச்சரியம் அடைந்தார். அதற்கு முன்னதாகவே ஃபாரா ஹெயின்சினுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஹூண்டாய் நிறுவனம் அங்கு வரவழைத்திருந்தது. பின்னர் அவர்கள் முன்னிலையில் புதிய எலான்ட்ரா கார், ஃபாரா ஹெயின்சுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

ஃபாரா ஹெயின்சுக்கு புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பரிசாக வழங்கப்பட்ட வீடியோ, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஃபாரா ஹெயின்சின் கதை நமக்கு மற்றொரு பாடத்தையும் உணர்த்துகிறது. ஒரே காரில், அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில், 1 மில்லியனுக்கும் அதிகமான மைல்கள் பயணிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு முதலில் காரும் ஒத்துழைக்க வேண்டும்.

தனி ஆளாக 16 லட்சம் கிலோ மீட்டர்கள் கார் ஓட்டிய பெண்!! வித்தியாசமான முறையில் கிடைத்த பரிசு இதுதான்...

ஆனால் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது, ஆயில் மாற்றுவது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகளின் மூலம் காரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஃபாரா ஹெயின்ஸ், பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டதன் மூலம்தான் அவரது கார் இந்த சாதனைக்கு ஒத்துழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 25, 2018, 18:34 [IST]
English summary
US Women Drove Her Hyundai Elantra To Over a Million Miles In 5 Years. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+