பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது குண்டு துளைக்காத அம்பாஸிட்டர் காரை பிரதமர்கள் பயன்படுத்திவந்தனர். அந்த காரை மாற்றி அவர் உட்பட இனி வரும் பிரதமர்கள் பிஎம்டபிள்யூ 7 -சீரிஸ் செக்யூரிட்டி எடிசன் காரை வாங்க

By Balasubramanian

இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக திகழ்ந்தவர் வாஜ்பாய். இவர் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்று இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டு வர பெரும்பங்கு வகித்தது.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

இவர் காலகட்டங்களில் இவர் செய்த பொக்ரான்-2 அனுகுண்டு சோதனை, கார்கில் போர், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் செயல்பட்ட விதம் அவரை பெரும் அளவில் உயர்த்தியது.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் நேற்று டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரை நினைவு கூறும் விதமாக அவர் பிரதமாராக இருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது குண்டு துளைக்காத அம்பாஸிட்டர் காரை பிரதமர்கள் பயன்படுத்திவந்தனர். அந்த காரை மாற்றி அவர் உட்பட இனி வரும் பிரதமர்கள் பிஎம்டபிள்யூ 7 -சீரிஸ் செக்யூரிட்டி எடிசன் காரை வாங்கினார்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

இந்தியாவில் விவிஐபிகளுக்காக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் பரிந்துரையின்படிதான் இந்த வாகனம் வாங்கப்பட்டது. இந்த காரில் பல கன ரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கார் வாங்குவதற்கு முன்னர் பெரும்பாலான இந்திய பிரதமர்கள் புல்லட் ப்ரூப் கொண்ட ஆம்பாஸிட்டர் கார்களையே பயன்படுத்தி வந்தனர்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சீர் குழைக்க பெரும் தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது. இந்திய அரசியல் வாதிகளை கொல்வது மூலம் இந்தியாவை அச்சுறுத்த தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக அவரது பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை வந்தது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய அவரதுவாகனத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் பரிந்துரைக்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

அவருக்கு வழங்கப்பட்ட இந்த பிஎம்டபிள்யூ கார், சொகுசு வசதிகள் நிறைந்த காராகும். இது பிஎம்டபிள்யூ 740 Li வேரியன் கார். இதில் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பயன்பாட்டிற்காக 4 கார்கள் வாங்கப்பட்டன.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

அதில் ஒரு கார் ஸ்டாண்ட் பை வாகனமாகவும், இரண்டு கார்கள் அவர் பயணத்தின் போது டெகாய் வாகனமாகவும், ஒரு கார் அவர் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் டெகாய் கார்கள் இந்தியாவில் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

வாஜ்பாய்க்கும் முன் 1984-1989 ஆகிய காலகட்டங்களில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் தனக்கு சொந்தமாக மாருதி 1000 செடன் ரக கார். மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 எஸ்இஎல் கார், ரேஞ்ச் ரோவர் கார் ஆகிய கார்களை வைத்திருந்தார். பென்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் காரை ஜோர்டன் நாட்டு ராஜா ராஜீவ் காந்திக்கு பரிசாக வழங்கினர்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

ராஜீவ் காந்திக்கு மற்றவர்கள் கார் ஒட்டும் போது தான் பயணம் செய்வதை விட தானே கார் ஓட்டி செல்வதை தான் விரும்புவார். அவரது சொந்த கார்களை பெரும்பாலும் அவரே ஓட்டி செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

ராஜீவ் காந்திக்கு முன் பிரதமராக இருந்த அவரது தாய் இந்திரா காந்தியும். அம்பாஸிட்டர் காரையே பயன்படுத்தினார். ராஜீவ் காந்திக்கு பின் வந்த சில பிரதமர்களும் அம்பாஸிட்டர் காரையே பயன்படுத்தினர். வாஜ்பாய் வந்த பின்பு இந்த பிஎம்டபிள்யூ காரை மாற்றிய பின்பு தான் பிரதமர்களுக்கான அம்பாஸிட்டர் கார்கள் ஒழிக்கப்பட்டு இந்த கார் பயன்படுத்தப்பட்டது.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

அதன் பின் வந்த பிரதமர் மன்மோகன் சிங், மோடி என யாரும் அம்பாஸிட்டர் காரை பயன்படுத்துவதில்லை. இந்த பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்கள் செல்லும் விழா, அல்லது இடத்திற்கு ஏற்ப கார்கள் மாறும். பிரதமர்கள் டில்லியில் இருக்கும் போது பெரும்பாலும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் தான்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

வாஜ்பாய் பிரதமராக 2004ம் ஆண்டு வரை இருந்தார் அதன் பின் அவர் அம்பாஸிட்டர் காரை பயன்படுத்த துவங்கினர். அப்பொழுது ஒரு நாள் அவர் சென்ற அம்பாஸிட்டர் காரின் கதவு திறக்காமல் ஜாம் ஆகியது. அதனால் அவர் வெளிய வரமுடியாமல் தவித்தார். பின்னர் அவர் வயதான காலத்திலும் பின் சீட்டில் இருந்து முன் சீட்டிற்கு சிறிய இடைவெளி வழியாக வந்து முன் சீட் வழியாக காரை விட்டு வெளியே வந்தார்.

பிஎம்டபிள்யூ காரை முதன் முதலாக பயன்படுத்திய கார்கில் நாயகன் வாஜ்பாய்; பின்னணி சுவாரஸ்ய கதைகள்

இந்த செய்தி இந்தியா முழுவதும் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து அப்பொழுது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவர் பிரதமர் பதிவியில் இருப்பபவர்களுக்காக வாங்கிய பிஎம்டபிள்யூ கார் ஒன்று காரை அவருக்கு வழங்கினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
India’s first PM to use BMW 7-Series Replacing Hindustan Ambassador. Read in Tamil
Story first published: Friday, August 17, 2018, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X