2019 ஃபோர்டு மஸ்டாங் ’புல்லிட்’ காரின் விற்பனை தொகையை கேட்டு திகைத்துப்போன அமெரிக்கா..!!
2019 ஃபோர்டு மஸ்டாங் ’புல்லிட்’ காரின் விற்பனை தொகையை கேட்டு திகைத்துப்போன அமெரிக்கா..!!
அமெரிக்காவில் நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில் ஃபோர்டு நிறுவனம் மஸ்டாங்கின் புதிய சிறப்பு பதிப்பு மற்றும் 2017 ஜிடி என இரண்டு கார்களை அதிக தொகைக்கு விற்பனை செய்து உலகையே ஆச்சர்யப்படுத்தியது.

அமெரிக்காவின் அரிசோனாவில் பாரட்-ஜாக்சன் ஏல நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஃபோர்டு நிறுவனம் கொள்ளை லாபம் பார்த்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்டு நிறுவனம் 2019 மஸ்டாங் காரின் சிறப்பு பதிப்பை உலக பார்வைக்கு கொண்டு வந்தது.
Recommended Video


1968ம் ஆண்டில் வெளியான புல்லிட் என்ற படத்தில், ஸ்டீவ் மெக்குவின் என்ற நடிகர் இந்த காரை படம் முழுவதும் ஓட்டி வருவார். இதனால் இந்த புல்லிட் கார் உலகளவில் பிரபலமானது.

இந்த படத்தின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தற்போது ஃபோர்டு, 2019 மஸ்டாங் காரில் புல்லிட் என்ற சிறப்பு பதிப்பை கண்காட்சியில் வெளியிட்டது.
Trending On DriveSpark Tamil:

அடர்த்தியான பச்சை நிற வெளித்தோற்றம் மற்றும் கருப்பு நிற சக்கரங்கள் என மிடுக்கான தோற்றத்தில் ஃபோர்டு மஸ்டாங் புல்லிட் பதிப்பு மேடையேறியது.

புல்லிட் மஸ்டாங் காரில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 475 பிஎச்பி பவர் மற்றும் 569 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

மணிக்கு 262 கி.மீ வேகத்தில் பறக்கும் 2019 ஃபோர்டு மஸ்டாங் புல்லிட் கார், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் அடர்த்தியான பச்சை நிறத்திற்கு ஏற்ப, காரின் உள்கட்டமைப்பு முற்றிலும் இலகுவான பச்சை நிற பூச்சு பெற்றுள்ளது.

அதை மேலும் உயர்த்திக்காட்ட கிரோம் நிற பட்டைகளில் உட்புறங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர காரின் இருக்கைகள் ரெகேரோ என்ற பிராண்டை தாங்கியவாறு பச்சை நிற பூத்தையலை பெற்றுள்ளது.

அசாத்திய திறன், கவர்ந்திழுக்கும் அம்சங்கள், சத்தமான புகைப்போக்கி குழாய் என ஆடம்பரத்திற்குரிய அனைத்து கட்டமைப்புகளும் இந்த காரில் உள்ளது.

ஏலத்தில் 300,000 டாலர்கள் கொடுத்த 2019 ஃபோர்டு மஸ்டாங் புல்லிட் பதிப்பு வாங்கப்பட்டது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2 கோடி.
இதே ஏலத்தில் 2017 ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் 2.55 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 16 கோடிக்கு விற்பனையானது.
Trending On DriveSpark Tamil:

புதிய மஸ்டாங் புல்லிட்பதிப்பின் ஏலத்தொகையை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்காக இயங்கி வரும் கலிஃபோர்னியா பாய்ஸ் ரிப்பளிக் சேரிட்டி என்ற தொண்டு நிறுவனத்திற்கு ஃபோர்டு நன்கொடையாக வழங்கியுள்ளது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








