மல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..! யானை பசிக்கு சோளப்பொறியா?

இந்தியாவில் 9 ஆயிரம் கோடியை ஏமாற்றி சென்ற விஜய் மல்லையாவின் 6 கார்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மல்லையாவிற்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளத

இந்தியாவில் 9 ஆயிரம் கோடியை ஏமாற்றி சென்ற விஜய் மல்லையாவின் 6 கார்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மல்லையாவிற்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இந்திய வங்கிகளிடம் வாங்கிய சுமார் 9 ஆயிரம் கோடி கடனை கட்டாமல் பாக்கி வைத்து வெளிநாடு தப்பி சென்றவர் விஜய் மல்லையா. இவரை இந்தியாவிற்கு கொண்டு வரசு மத்திய அரசு தீவிரமான முயற்சியில் இருக்கிறது. இதற்காக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இந்தியாவில் ஒரு காலத்தில் பெரும் பணக்காரராகவும், பெரும் செல்வாக்கு பெற்றவராகவும் திகழ்ந்தவர் விஜய் மல்லையா. இவருக்கு சொந்தமாக கிங் பிஷ்ஷர் விமான நிறுவனங்கள் இருந்தது எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இது மட்டும் அல்லாது பல விலை உயர்ந்த கார்களும் அவரிடம் இருக்கிறது. மேலும் அவருக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்பும் அதிகளவில் உள்ளது. இதை விற்றாலே கடனில் ஒரு குறிப்பிட்ட பகுதியை செலுத்தி விடலாம்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

ஆனால் தற்போது விஜய் மல்லையா லண்டனிற்கு சென்று ஒழிந்து கொண்டதால் அவரது சொத்துக்களை விற்பதிலும் சிக்கல் உள்ளது. இதனால் அவரை இந்தியா கொண்டு வர லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவரிடம் உள்ள 6 சொகுசு கார்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை, அவருக்கு கடன் கொடுத்த 13 நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இதனிடையே அவரிடம் உள்ள அந்த 6 சொகுசு கார்களுக்கும் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அந்த கார்களில் உள்ள நம்பர் பிளேட்கள் எல்லாம் அவரது பெயரான விஜய் மல்லையா என்பதை குறிக்கம் வகையில் VJM என்ற குறியீட்டை பெற்றிருக்கும்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

அவரிடம் உள்ள போர்ஷே கேன்னே காரின் பதிவு எண் 0007 VJM ஆகும். இது கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் எண்ணை குறிக்கும்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

அவரிடம் உள்ள 2006 மாடல் ஃபெராரி எஃப் 430 கார் BO55 VJM என்ற பதிவு எண்ணை கொண்டது. இது ஆங்கிலத்தில் BOSS VJM என்ற சொல்லை குறிப்பதாக அமைந்துள்ளது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

அடுத்தாக அவரிடம் உள்ள 2014ம் ஆண்டு மாடல் ரேஞ்ச்ரோவர் காரின் எண் F1 VJM இவர் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா 1 அணியின் ஓனராக இருந்ததன் அடையாளமாக இதை வாங்கினார். மேலும் அவர் 2012ம் ஆண்டு மாடல் மேபேஜ் 62 காரில் VJM1 என்ற நம்பர் பிளேட்டையும் வைத்திருக்கிறார்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

மேலும் இந்த உத்தரவில் மல்லையாவிடம் உள்ள மினி கண்ட்ரிமேன் மற்றும் ஃபெராரி எஃப்512எம் காரை குறைந்தது 4,04,000 பவுண்டிற்கு குறைவாக விற்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.3 கோடியாகும்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

இதற்கு முன்னர் அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிடகோரி கோர்ட்டில் கோரிய போது அதை கோர்ட் மறுத்துவிட்டது. தற்போதுதான் இந்த வழக்கில் ஒரு சொத்தை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் அவரது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் உள்ள பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

தற்போது மல்லையாவின் ஆறு கார்களை ஏலத்தில் விட கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கேட்டு வருகிறது. அதற்கான தீர்ப்பு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்லையாவின் கடனுக்கு பதிலாக அவரது 6 கார்களை வைத்துக்கொள்ளுங்கள் : லண்டன் நீதிமன்றம்

மல்லையா இந்திய வங்கிகளிடம் பாக்கி வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு ரூ 9 ஆயிரம் கோடி ஆனால் இந்த 6 கார்களை விற்றாலும் அதிகபட்சம் 20கோடிக்கு மேல் தேறாது. யானை பசிக்க சோளப்பொறியை வழங்கியது போல் 9 ஆயிரம் கோடியை அடைக்க 6 கார்களை வழங்கியுள்ளது லண்டன் நீதிமன்றம்

Most Read Articles
English summary
Vijay Mallyas 6 posh cars coming for auction. Read in Tamil
Story first published: Saturday, October 20, 2018, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X