புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், 1.2 லிட்டர் எஞ்சின் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்திய நிலையில், புதிய 1.0 லிட்டர் எஞ்சின் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் புதிய 1.0 லிட்டர் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமே மைலேஜ்தான். பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜ் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.78 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடால் 18 கிலோ எடை குறைந்திருக்கிறது. இந்த மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விற்பனை செய்யப்பட்ட ரூ.5.41 லட்சம் என்ற அதே ஆரம்ப விலையிலேயே புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இதே போலோ ஜிடி டிடிஐ மாடலில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

English summary
New Volkswagen Polo 1-litre petrol engine model introduced in India.
Story first published: Friday, March 9, 2018, 18:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark