இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் கட்டுமானத் தரம் எந்தளவுக்கு சிறப்பானது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

By Saravana Rajan

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல முன்னணி நிறுவனங்களின் கார்கள் கட்டுமானத் தரத்தில் சிறப்பாக இல்லை என்பது கிராஷ் டெஸ்ட் முடிவுகள் மூலமாக அம்பலமானது. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும் கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கார்களை தயாரிக்கின்றன.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிறந்த கட்டுமானத் தரத்துடன் கார்களை தயாரித்து வருவது உலகறிந்த உண்மை. மேலும், அந்த நிறுவனத்தின் கட்டுமானத் தரத்தையும், மிக நேர்த்தியான டிசனையும் மனதில் வைத்தே கார் வாங்குகின்றனர்.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் கார்களின் கட்டுமானத் தரத்தை மெய்ப்பிக்கும் விதத்தில் அண்மையில் நடந்த விபத்து சான்றாக மாறி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று கதர்நாக் புலியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

அப்போது, சாலை ஓரத்தில் இருந்த இரும்பு கோபுரம் ஒன்று, அந்த ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் மீது திடீரென விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக கார் அந்த இரும்புத் கோபுரத்தை தாங்கியிருக்கிறது.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

இதனால், காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தை படம் பிடித்து ஃபோக்ஸ்வேகன் டீலர் பணியாளர் குழுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

நிச்சயம் வேறு காராக இருந்திருந்தால், இந்த ராட்சத இரும்பு கோபுரத்தின் எடை தாங்காமல் அப்பளமாகி இருக்கும். ஆனால், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் வலுவான ஏ பில்லரும், பி பில்லரும் இரும்புத் தூணை அசங்காமல் தாங்கி இருக்கிறது.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவர் காயமின்றி உயிர் தப்பி இருப்பதாக அந்த ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

இந்த சம்பவத்தில் காரின் முன்புற விண்ட்ஷீல்டு மட்டும் நொறுங்கிப்போயுள்ளது. பெரிய அளவிலான சேதம் ஏற்படாமல் போனது அதிர்ஷ்டவசமாகவே கூறலாம்.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

இதே இடத்தில் வேறு காராக இருந்திருந்தால் நிச்சயம் ராட்சத கோபுரத்தின் பாரம் தாங்காமல் நசுங்கி போயிருக்கும். உள்ளே இருந்தவரும் அதிக பாதிப்பை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது.

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

விபத்துக்களில் உயிரிழப்புகள், சேதம் ஏற்படுவதற்கு சூழ்நிலை உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளலாம். அதேநேரத்தில்,வேறு காராக இருந்தால் நிச்சயம் அதிக சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

Picture Credit:Volkswagen Technicians Shakun Motors Jodhpur - Rajsthan

இரும்பு கோபுரத்தை தாங்கி பிடித்து உரிமையாளரை காப்பாற்றிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ!

மேலும், இது முதல் சம்பவம் இல்லை. கேரளாவில் சில மாதங்களுக்கு முன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இரண்டு டிரக்குகளுக்கு இடையில் சிக்கியது.

Most Read Articles
English summary
Volkswagen Vento Built Quality Proved Again.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X