2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

கேரளாவில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று இரண்டு டிரக்குகளுக்கு இடையில் சிக்கி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நடந்த அதிசய விஷயம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்படுவதில்லை; பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற கருத்து உள்ளது. ஆனால், சில வேளைகளில் அவற்றையெல்லாம் மீறி பயணிகள் உயிர் தப்பும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

அவ்வாறு கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் பயணிகள் மிக பயங்கர விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து பற்றி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

வீடியோவில் இந்த விபத்து குறித்து ஒருவர் மலையாளத்தில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிரக்குடன் மோதியதாக தெரிகிறது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

இதனையடுத்து, பின்தொடர்ந்து வந்த பிக்கப் டிரக் ஒன்று வென்ட்டோ காரின் பின்புறத்தில் மிக பலமாக மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பகுதியும், பின்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

எனினும், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியதாக வீடியோவை பதிவிட்டவர் கூறுவது ஆறுதல் தரும் விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

பொதுவாக ஃபோக்ஸ்வேகன் கார்கள் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்டவை என்ற கருத்து உண்டு. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் இந்த விபத்து சான்றாக அமைந்துள்ளது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

மேலும், இந்த காரின் க்ரம்பிள் ஸோன் எனப்படும் மோதல் தாக்கத்தை உள்வாங்கி பயணிகளை காக்கும் கட்டமைப்பு நுட்பமும் சிறப்பாக இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

க்ரம்பிள் ஸோன் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக இருப்பதுடன், இதுபோன்ற விபத்துக்களின்போது பயணிகளை பாதுகாக்கும் உள்கூடு வடிவமைப்பும் முக்கியம். அது இந்த காரில் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

இந்த விபத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. இருப்பினும், பயணிகள் உயிர் தப்பியது நிச்சயம் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயமாகவே பார்க்க முடியும்.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

ஏனெனில், இப்போது எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் விதத்தில் காரின் கட்டுமானத் தரத்தில் பல கார் நிறுவனங்கள் சமரசம் செய்து கொண்டுவிடுகின்றன.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

ஆனால், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் மட்டுமே இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது இதுபோன்ற விபத்துக்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

 2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!

இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு தரத்தை சோதிப்பதற்கான மையங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அவை விரைந்து கொண்டு வர வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அனைத்து கார் நிறுவனங்களும் கார்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

சூப்பர் பைக்குகளில் வந்தவர்களை வளைத்து பிடித்த கிராம மக்கள்... நடந்தது என்ன?

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

பெங்களூர் அருகே கேடிஎம் பைக் மோதி சிறுமி பலியான சம்பவத்தையடுத்து, அந்த வழியாக விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்களை வழிமறித்து கிராமத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

வார விடுமுறை நாட்களில் பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அருகிலுள்ள நந்தி ஹில்ஸ் மலைப்பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் தங்களது விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் மேற்கொண்டு மாலையில் பெங்களூர் திரும்புவது வழக்கம்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மோட்டார்சைக்கிள் குழுவை சேர்ந்தவர்கள் பெங்களூரிலிருந்து வழக்கம்போல் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுபோன்று இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற கேடிஎம் பைக் ஒன்று, சிக்கபள்ளாபூர் சென்றுள்ளது.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

அந்த பகுதியில் உள்ள நந்தி உபச்சார் ஓட்டலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த சிறுமி உயிரிழந்தார்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

இதையடுத்து, அங்கு கூடிய அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பைக்கில் வந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். மேலும், பைக்கையும் அடித்து நொறுக்கினர்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

அத்துடன், விடாமல் அந்த நெடுஞ்சாலை வழியாக ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

இதனால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இளைஞர்கள் தாக்கப்படுவதும், கேடிஎம் ட்யூக் 390, பிஎம்டபிள்யூ ஆர்ஜி1200 மற்றும் புத்தம் புதிதய ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு கிடப்பது குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

மேலும், சம்பத்தில் தொடர்பு இல்லாத மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அந்த வழியில் சாலையில் அமர்ந்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

இந்த வீடியோக்கள் வாகன பிரியர்கள் நடத்தி வரும் சமூக வலைதள பக்கங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

அந்த வழியாக பைக்கில் செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றனர் என்ற கோபத்தில் அப்பகுதி மக்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, விலை உயர்ந்த பைக்குகளில் வந்தவர்களை பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

தகவல் அறிந்து போலீசார் வந்தும், தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை அங்கு கைமீறி போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

மேலும், விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த வழியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!

நெடுஞ்சாலைகளில் ஜாலி ரைடு என்ற பெயரில் விலை உயர்ந்த பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் சென்றாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துக்களையும், விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்கலாம்.

English summary
Volkswagen Vento Crash In Kerala.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark