சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

வால்வோ நிறுவனத்தின் XC 40 காருக்கு மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. இந்தியாவில் லான்ச் செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, வால்வோ XC 40 காரின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

By Arun

வால்வோ நிறுவனத்தின் XC 40 காருக்கு, சேவாக் போல் மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. இந்தியாவில் லான்ச் செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, வால்வோ XC 40 காரின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் கார்களில் வழங்கப்படும் லக்ஸரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. இதனால் வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

கடந்த மாதம் வரை இந்தியாவில், எக்ஸ்சி 60 (XC 60), எக்ஸ்சி 90 (XC 90) கார்களை மட்டுமே வால்வோ விற்பனை செய்து வந்தது. இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது எக்ஸ்சி 40 (XC 40). கடந்த சில நாட்களுக்கு முன்தான் XC 40 காரை, வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

இந்தியாவில் உள்ள வால்வோ நிறுவனத்தின் டீலர்ஷிப்களில், XC 40 காருக்கான புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விற்பனையும் கூட தொடங்கிவிட்டது. வால்வோ நிறுவனத்தின் சில டீலர்களிடம் பேசியதன் மூலமாக, XC 40 காருக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

சிறிய ரக எஸ்யூவி வகை மாடலான XC 40 காருக்கு, அதிக அளவிலான புக்கிங்களை அனைத்து டீலர்களும் பெற்று கொண்டுள்ளனர். இந்த சூழலில், பெங்களூருவில் உள்ள மார்டியல் மோட்டார்ஸ் என்ற டீலர் மூலமாக இன்று (12ம் தேதி) ஒரே நாளில் 12 XC 40 கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

XC 40 காருக்கு, இந்தியாவிலேயே அதிக புக்கிங்களை மார்டியல் மோட்டார்ஸ்தான் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்பு நிற டாப் உடனான சிகப்பு, கருப்பு நிற டாப் உடனான நீலம், கருப்பு நிற டாப் உடனான வெள்ளை ஆகிய 3 வண்ணங்களில் XC 40 கார் விற்பனை செய்யப்படுகிறது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

ஆனால் R-Design என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே XC 40 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வால்வோ நிறுவனத்தின், காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்சர் (CMA) என்ற புதிய பிளாட்பாரமின் கீழ் XC 40 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

வால்வோ கார்கள், பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகவும் பெயர் பெற்றவை. அந்த வகையில் இதர வால்வோ கார்களை போல், XC 40 காரிலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இந்த செக்மெண்டில் மிகவும் பாதுகாப்பான காராகவும் வால்வோ XC 40 கருதப்படுகிறது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

ஏர்பேக்ஸ் மற்றும் ஏபிஎஸ் போன்ற வழக்கமான பாதுகாப்பு அம்சங்களை தவிர, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிரைவரின் கண்ணுக்கு புலப்படாத பிளைண்ட் ஸ்பாட்டில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் வசதி உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் வால்வோ XC 40 காரில் இடம்பெற்றிருக்கின்றன.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

அதுமட்டுமல்லாமல் பயணம் செய்து கொண்டிருக்கும் லேனில் இருந்து தவறுதலாக விலகி சென்றால், அதை டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும் வசதியும் XC 40 காரில் உள்ளது. இத்தகைய பாதுகாப்பு வசதிகள் வால்வோ XC 40 காரை, செமி-அட்டானமஸ் கேட்டகரியில் சேர்க்கின்றன.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால், வால்வோ XC 40 கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. வால்வோ XC 40 காரில், 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. வால்வோ XC 40 காரில், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

வால்வோ எக்ஸ்சி 40 காரின் விலை, 39.9 லட்சம் என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது. ஆடி க்யூ 3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 உள்ளிட்ட கார்களுடன் வால்வோ எக்ஸ்சி 40 கார் நேரடியாக போட்டியிடும்.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

இந்தியாவில் சமீப காலமாக வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான 2018ம் ஆண்டின் முதல் பாதியில், 1,242 கார்களை வால்வோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

கடந்த 2017ம் ஆண்டின், ஜனவரி-ஜூன் வரையிலான முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், வால்வோ நிறுவனத்தின் கார்களின் விற்பனை, 2018ம் ஆண்டின் முதல் பாதியில் 33 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2018, 16:48 [IST]
English summary
Volvo dealer in Karnataka delivers 12 new XC40 cars to customers in a single day. Read in tamil
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+