குறைந்த விலை ஏசி பஸ்களை தயாரிக்கிறது வால்வோ மற்றும் ஈச்சர் நிறுவனங்கள்
வால்வோ மற்றும் ஈச்சர் ஆகிய நிறுவன்கள் இணைந்து குறைந்த செலவில் நிறைந்த வசதிகளுடனும், சொகுசு அம்சங்களுடனான பொது போக்குவரத்து வானகங்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாகனங்களை மத்திய
வால்வோ மற்றும் ஈச்சர் ஆகிய நிறுவன்கள் இணைந்து குறைந்த செலவில் நிறைந்த வசதிகளுடனும், சொகுசு அம்சங்களுடனான பொது போக்குவரத்து வானகங்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாகனங்களை மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வால்வோ குரூப் மற்றும் ஈச்சர் மோர்ட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து விஇ கமர்ஷியல் வாகனங்கள் என்ற நிறுவனம் மூலம் பொது போக்குவரத்திற்கான வாகனங்களை எலெக்ட்ரிக்கல் தொழிற்நுட்பத்துடன் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சித்தார்த்தா லால் கூறுகையில் : "எங்கள நிறுவனம் இந்த நிதியாண்டில் ரூ 500 கோடியை புதிய ரக வாகனங்களை தயாரிக்கவும் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் ஒதுக்கியுள்ளளோம்.

இதன் மூலம் பொது பயன்பாடிற்காக பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் ஏசி பஸ்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம்." என கூறினார்.

முன்னாதாக பங்குதாரர்களுக்கு 2017-2018ம் ஆண்டிற்கான ரிப்போர்ட்டை அனுப்பிய லால் அதில் விஇ நிறுவனம் லைட் மற்றும் ஹெவி பஸ்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் : "எங்கள் நிறுவனத்திடம் பொது போக்குவரத்து வாகனங்களை தயாரிக்கும் எல்லா தொழிற்நுட்பங்களும் இருப்பதாகவும், உலக தரம் வாய்ந்த மற்றம் அதிக வசதிகள் நிறைந்த தயாரிப்புகளை எங்களால் தயாரிக்க முடியும்.

தற்போது நாங்கள் குறைந்த விலையிலான ஏசி பஸ்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிக சிறந்ததாக இருக்கும்." என கூறினார்.

விஇ கமர்ஷியல் வாகன நிறுவனம் கடந்த 2017-2018ம் நிதியாண்டில் மொத்தம் 65,932 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2016-17ம நிதியாண்டில் விற்பனையான வாகனங்களின எண்ணிக்கை விட 12.5 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும் அந்நிறுவனம் தற்போது கட்டுமானம், மைனிங், இ-காமர்ஸ் போன்ற துறைகளுக்கு தேவையான வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்த துறைகளின் வளர்ச்சியில் இந்த ரக வாகன விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மார்கெட்டில் 88 சதவீத ஷேரை இந்த நிறுவனம் தான் வைத்திருக்கிறது. தற்போது இந்நிறுவனம் ஆப்ரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் லைட் மற்றும் ஹெவி டியூட்டி பஸ்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் அசம்பிள் செய்யும் பணியை வங்கதேசத்தில செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கென்யா மற்றும் நைஜிரியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே உற்பத்தியை துவங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தபணிகள் முடிந்ததும் வங்க தேசத்தில் பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








