கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. கிராஷ் டெஸ்ட் ஆய்வில் இந்த காரின் கட்டுமானம் மிக வலுவாக இருப்பதும், பெரியவர்களுக்க

By Saravana Rajan

ஐரோப்பிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்து சக்கைபோடு போட்டு வரும் இந்த எஸ்யூவிக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

உலகின் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடல்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது வால்வோ நிறுவனம். அந்த நிறுவனத்தின் எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய எஸ்யூவி மாடல்கள் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு அறிமுகமான எக்ஸ்சி40 எஸ்யூவியை யூரோ என்சிஏபி அமைப்பு அண்மையில் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்தது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

இதில், பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. மோதல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

கிராஷ் டெஸ்ட் ஆய்வில் இந்த காரின் கட்டுமானம் மிக வலுவாக இருப்பதும், பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தலை, கழுத்து, இடுப்பு மற்றும் கால் பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், பின் இருக்கை பயணிகளுக்கு மார்பு பகுதி பாதுகாப்பு மிகச் சிறப்பானதாக கூற முடியாது என்றும், பரவாயில்லை என்றும் யூரோ என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

பக்கவாட்டில் மோதும்போது மிகச் சிறப்பான பாதுகாப்பை இந்த கார் வழங்குவதாக கிராஷ் டெஸ்ட் முடிவுகள் தெரிவிக்கின்றன. பின்புற மோதல்களின்போது, கழுத்துப் பகுதி பாதிக்கப்படாத வகையில், இதன் பாதுகாப்பு அம்சங்கள்இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

நகர்ப்புறத்தில் ஓட்டும்போது இதன் அவசரகால தானியங்கி பிரேக் சிஸ்டம் மிகச் சிறந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து, ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் தவறுகளால் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

யூரோ என்சிஏபி அமைப்பால் தற்போது கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் இதே எக்ஸ்சி40 கார்தான் அண்மையிலும் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில், எக்கச்சக்க முன்பதிவுகளை குவித்தது. முதல் 15 நாட்களில் 200 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி!!

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்த காருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், மேலும் இரண்டு புதிய வேரியண்ட்டுகளையும் சில தினங்களுக்கு முன் வால்வோ கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம்.

2018ம் ஆண்டின் ஐரோப்பாவின் சிறந்த கார் மாடலுக்கான விருதை பெற்றிருக்கும் வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு இப்போது கிராஷ் டெஸ்ட்டிலும் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்றிருப்பது வர்த்தகத்திலும் கூடுதல் வலு சேர்க்கும் விஷயமாகவே பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 19, 2018, 10:22 [IST]
English summary
Volvo XC40 gets five star rating in Euro NCAP crash test assessment.
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+