புதிய வால்வோ எக்ஸ்சி40 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!
புதிய வால்வோ எக்ஸ்சி 40 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டி
புதிய வால்வோ எக்ஸ்சி 40 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சொகுசு கார் மார்க்கெட்டில் மிக சவாலான விலையில் வந்துள்ள இந்த புதிய வால்வோ கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வால்வோ நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி மாடலாக வால்வோ எக்ஸ்சி40 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய வடிவமைப்புக் கொள்கையின் கீழ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது

வால்வோ நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களுடன் மிக அழகிய எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் சுத்தியல் போன்ற எல்இடி பகல்நேர விளக்குகள் வால்வோ வாரிசு என்பதை எளிதாக காட்டுகிறது. 18 அங்குல அலாய் வீல்கள், பூமராங் வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை வால்வோவின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கிறது.

வால்வோ எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதே 9.0 அங்குல திரையுடன் கூடிய சென்சஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

இந்த புதிய சொகுசு காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் வயர்லெஸ் சார்ஜர், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப், விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அடிப்படையான பாதுகாப்பு விஷயங்கள் மட்டுமின்றி, பைலட் அசிஸ்ட், ரோல் ஓவர் புரோடெக்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். கருப்பு- சிவப்பு மற்றும் முழுவதுமான கருப்பு ஆகிய இரண்டு இன்டீரியர் வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் டீசல் எஞ்சினுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய R-Design என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, ஆடி க்யூ3 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 ஆகிய ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி கார்களுடன் நேரடியாக போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








