விரூம் ட்ராக் மீட் பெங்களூருவில் வரும் 26ல் துவக்கம்..!

விரூம் ட்ராக் மீட் வரும் 26-28ம் தேதி வரை பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனேஜா ஏரோட்ரம் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்த

விரூம் ட்ராக் மீட் வரும் 26-28ம் தேதி வரை பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனேஜா ஏரோட்ரம் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

விரூம்..! பெங்களுருவில்

இதில் முதல் நாள் இந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் மற்றும் அவர்களது வாகனங்களை பதிவு செய்யும் பணி நடக்கவுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் நாட்களில் பல்வேறு கேட்டகிரியில் ரேஸர்கள் பங்கு பெறுகின்றனர். இதில், பழைய 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பைக்குகள் முதல் நவீன 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பைக்குகளும் கலந்து கொள்கின்றன.

விரூம்..! பெங்களுருவில்

இரண்டாம் நாளில் இந்திய கார் மற்றும் பைக்குகளுக்கு இடையேயான ஒற்றைக்கு ஒற்றை போட்டிகள் நடக்கவுள்ளன. கடைசி நாளில் பல்வேறு விதமான சூப்பர் கார் மற்றும் சூப்பர் பைக்குகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கவுள்ளன.

விரூம்..! பெங்களுருவில்

டிராக் ரேஸிங் என்பது ஒரு வகையான மோட்டார் பந்தயம்தான். இதில் கார்களும், பைக்குகளும், பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் வாகனங்கள் இது போன்ற போட்டிக்காவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் ஆகும்.

விரூம்..! பெங்களுருவில்

இந்த போட்டியை இந்தியாவின் மோட்டார் பந்தய ஆணையமான எஃப்எம்எஸ்சிஐ நடத்துகிறது. இந்த முறை பெங்களூருவில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. பல்வேறு மோட்டார் பந்தய வீரர்கள், வித்தியாசமான அதிக திறன் கொண்ட பைக்குளை வடிவமைப்பவர்கள் என பலருக்கு இது ஒரு சிறந்த மேடையாக இருக்க போகிறது.

Article Published On: Tuesday, October 23, 2018, 19:31 [IST]
English summary
vroom drag meet bangalore taneja aerodrome. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+