உங்க கார் விபத்தில் சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி கார், பைக் என வாகனம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கான இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். வாகனம் விபத்தில் சிக்கினால் அதனால் நஷ்டம் ஏற்படுபவர்களுக்கு இந்த இன்சூரன்

1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி கார், பைக் என வாகனம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கான இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். வாகனம் விபத்தில் சிக்கினால் அதனால் நஷ்டம் ஏற்படுபவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ்தான் உதவுகிறது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

இப்படி இருக்கையில் உங்கள் காருக்கு எந்த இன்சூரன்ஸ் சிறந்ததாக இருக்கும் என நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இன்சூரன்ஸ் இரண்டு வகைகளாக உள்ளது. மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் மற்றும் கம்பிரிஹேண்ஷிவ் கார் இன்சூரன்ஸ் எனும் முழுவதுமாக கவராகும் இன்சூரன்ஸ்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது விபத்து ஏற்பட்டால் விபத்து நிகழ்த்திய வாகனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவது. முழு இன்சூரன்ஸ் என்றால் பாதிக்கப்பட்டவருக்கும், சொந்த வாகனதாரருக்கும் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

நீங்கள் கார் வாங்குகிறீர்கள் என்றால் மூன்றாம் நபருக்கான காப்பீட்டை பெறுவது நல்லதா? அல்லது முழு காப்பீட்டை பெறுவது நல்லதா என்ற குழப்பம் உங்களிடம் இருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ்

மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது உங்களை சட்ட ரீதியிலான சிக்கலில் இருந்து காப்பாற்றும். உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் அதன் காரணமாக மூன்றாம் நபருக்கு காயம், உயிரிழப்பு, பொருள் இழப்பு ஏற்பட்டால் அவர்களுக்கான நஷ்ட ஈட்டை இந்த இன்சூரன்ஸ் ஈடுகட்டும். மோட்டார் வாகன சட்டப்படி இந்த இன்சூரன்ஸ் அனைத்து வாகனங்களுக்கும் சொந்தமானதாகும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

எப்படி பெறுவது?

இந்த இன்சூரன்ஸ் மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் எல்லா நிறுவனங்களிலும் கிடைக்கும். இது மட்டும் அல்லாது ஆன்லைனிலும் இந்த இன்சூரன்ஸை சுலபமாக பெற்று விடலாம்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

குறைந்த செலவு

மூன்றாம் நபருக்கான காப்பீடு என்பது விலை குறைவாக இருக்கும். ஆண்டுதோறும் இதற்கு ஆகும் செலவு குறைவுதான் என்பதால் குறைந்த விலையில் இன்சூரன்ஸ் பெற விரும்புபவர்கள் இதை தேர்வு செய்யலாம்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

பலன் பெறுவது

இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனம் உங்கள் வாகனம் விபத்து ஏற்படுத்தினால் அதனால் மூன்றாம் நபருக்கு ஏற்படக்கூடிய பொருளாதார சுமையை தாங்கிக் கொள்ளும். இதில் பாலிசி எடுப்பவருக்கு எந்த வித பலனும் கிடைக்காது. பாலிசி எடுப்பதுடன் பாலிசி எடுப்பவருக்கும் பாலிசி நிறுவனத்திற்குமான உறவு முடிந்தது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

இந்த பாலிசியின் கீழ் கவர் ஆகும் விஷயங்கள்

இந்த பாலிசி எடுத்துள்ளவர்களின் வாகனம் விபத்தில் சிக்கி அதில் மூன்றாம் நபருக்கு மரணம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மோட்டார் வாகன சட்டப்படி நஷ்ட ஈடாக ஒரு தொகையை வழங்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

அதே நேரத்தில் மூன்றாம் நபர் விபத்தில் காயமடைந்தால் அந்த நபருக்கான மருத்துவ செலவை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். அது சிறிய காயமாக இருந்தாலும் சரி பெரிய காயமாக இருந்தாலும் சரி.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

ஒரு வேளை விபத்தில் மூன்றாம் நபருக்கான சொத்து சேதாரமானால் அவர்களுக்கான நஷ்ட ஈட்டை மோட்டார் வாகன சட்டப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களே வழங்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

எது எல்லாம் கவர் ஆகாது?

போர், ராணுவ தாக்குதல் , போர் போன்ற ஆப்ரேஷன்கள் நடந்து அதில் ஏற்படும் விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது. கதிர் இயக்கம், அணுகுண்டு வீச்சு போன்ற சம்பவங்களால் நடக்கும் விபத்துக்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட இடங்களுக்கு வெளியே அதாவது ஓன் போர்டு வாகனங்கள் வெளிநாடுகளில் விபத்தில் சிக்கினால் இந்த இன்சூரன்ஸை கோர முடியாது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

உங்கள் வாகனத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கோ, நபருக்கோ ஒப்பந்த அடிப்படையில் விட்டிருந்தால் அப்பொழுதும் இன்சூரன்ஸ் தொகையை கோர முடியாது

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

உங்கள் வாகனத்தை உங்களது டிரைவர் அல்லது வாகனத்தின் ஓனரை தவிர வேறு யார் ஓட்டி செல்லும் போது விபத்து நேர்ந்தாலும் அதற்கான இன்சூரன்ஸ் தொகையை கோர முடியாது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

யார் மூன்றாம் நபருக்கான காப்பீட்டை வாங்கலாம்?

இந்த காப்பீடு மூன்றாம் நபருக்கான சேதாரத்தை மட்டுமே ஈடு செய்வதால் அதற்கான பீரிமியம் தொகை முழு காப்பீட்டின் தொகையை காட்டிலும் குறைவாக இருக்கும். மேலும் இதை பெறுவது மூலம் நீங்கள் விபத்தில் சிக்கி அதனால் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அது குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

காம்பிரிஹென்ஸிவ் காப்பீடு/ முழு காப்பீடு

முழு காப்பீட்டு திட்டத்தில் விபத்து ஏற்பட்டால் மூன்றாம் நபருக்கான காப்பீட்டுடன் இணைந்து சொந்த வாகனத்திற்கான சேதாரத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனங்களே வழங்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

முழு காப்பீட்டை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

விபத்து ஏற்பட்டு உங்கள் வாகனம் அதிகமாக சேதாரமானால் அதனால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விடுமோ என்ற உங்களின் பயத்தை இது சற்று குறைக்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மேலும் இதில் தீ விபத்தால் உங்கள் வாகனம் சேதமடைதல், வாகனம் திருட்டு போனால் அதற்கான இழப்பீடு, மூன்றாம் நபருக்கான பொருட் சேதாரம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு ஆகியன இதில் கிடைக்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

பீரிமியத்தை ஒப்பிடும் போது முழு காப்பீடு மூன்றாம் நபருக்கான காப்பீட்டை காட்டிலும் விலை சற்று அதிகமாகதான் இருக்கும். இருந்தாலும் அதன் பலன்களை பார்க்கும் போது சிறப்பான விலையில்தான் மார்கெட்டில் உள்ளது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

எது எல்லாம் கவர் ஆகும்?

திருட்டு, சாலை விபத்து, தீ விபத்து, விபத்தில் கார் முழுவதுமாக அழிந்து போகுதல், இயற்கை பேரிடர், கட்டிடங்கள் இடிந்து விழுதல், வன விலங்குகள் அல்லது மிருகங்களால் விபத்து ஏற்படுதல், வாகனத்தின் மீது ஏதேனும் பொருட்கள் விழுந்ததால் வாகனம் சேதாரமாதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த முழு காப்பீட்டில் இழப்பீடுகள் வழங்கப்படும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

எது எல்லாம் கவர் ஆகாது?

இந்த முழு காப்பீட்டிலும் சில இன்சூரன்ஸ்கள் கவர் ஆகாது. அவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

பொதுவாக வாகனத்தின் வயது அதிகமானதால் ஏற்படும் சேதாரங்கள், தற்செயலான இழப்பு, எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரேக் டவுன், டிரைவிங் லைசன்ஸ் இல்லாதவர் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட இழப்பு, பாலிசியில் குறிப்பிட்ட இடத்திற்கு வெளியே விபத்து நடத்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் கொண்டு கோர முடியாது.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மூன்றாம் நபருக்கான காப்பீட்டை விட முழு காப்பீடுதான் சிறந்தது ஏன் தெரியுமா?

முழு காப்பீடு, மூன்றாம் நபருக்கான காப்பீட்டை விட அதிக விலைதான் இருக்கும். இருந்தாலும், இந்த இரண்டிற்கான இழப்பீட்டு மதிப்பை பார்க்கும் போது முழு காப்பீட்டில்தான் அதிக இழப்பீடு கிடைக்கிறது. அதனால் அது சற்று விலை அதிகமாக இருந்தாலும் சிறந்த வாகன காப்பீடாக இருக்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மூன்றாம் நபருக்கான காப்பீடு எந்த வகையிலும் உங்களது இழப்பை ஈடு செய்யாது. உங்கள் வாகனம் ஏற்படுத்திய விபத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு சாதகமாகவே இதன் விதிகள் இருக்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

மேலும் முழு காப்பீட்டில் சில ஆட் ஆன் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் அதன் பலன்களை மூன்றாம் நபருக்கான காப்பீட்டில் அனுபவிக்க முடியாது. எனவேதான் மூன்றாம் நபர்களுக்கான காப்பீட்டை விட முழு காப்பீடு சிறப்பாக இருக்கும்.

உங்க கார் விபத்து சிக்குனா கவலையே வேண்டாம்; இது மட்டும் இருந்தா போதும்…!

இருந்தாலும் ஒவ்வொருவரது தேவைக்கும் பொருளாதார சூழ்நிலைக்கும் ஏற்ப அவர்களின் விருப்பங்கள் மாறுபடலாம். அதனால் இந்த பலன்களை மனதில் வைத்து உங்களது தேவை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை கணக்கிட்டு எது உங்களுக்கு சிறந்தது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Article Published On: Wednesday, October 10, 2018, 19:30 [IST]
English summary
Which insurance is best third party or comprehensive? Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+