புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

தற்போது புதிய கார்களை வாங்கும் போது நீண்ட கால காப்பீடை எடுக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்த விதியின் கீழ் எந்த வாகனங்களுக்கு எந்த மாதிரியான காப்பீடு சிறந்தது. மார்கெட்டில் எந்த விதமான

தற்போது புதிய கார்களை வாங்கும் போது நீண்ட கால காப்பீடை எடுக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்த விதியின் கீழ் எந்த வாகனங்களுக்கு எந்த மாதிரியான காப்பீடு சிறந்தது. மார்கெட்டில் எந்த விதமான இன்சூரன்ஸ்கள் உள்ள அதை எப்படி தேர்வு செய்வது பார்க்கலாம் வாருங்கள்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

சுப்ரீம் கோர்ட் மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தற்போது புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் மூன்று மற்றும் ஐந்தாண்டுகளுக்கான காப்பீடு பெறப்பட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

அதாவது தற்போது கார் வாங்குபவர்கள் கட்டாயம் மூன்றாண்டு இன்சூரன்ஸூம், பைக் வாங்குபவர்கள் கட்டாயம் 5 ஆண்டு இன்சூரன்ஸூம் வாங்க வேண்டும் என நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

தற்போது நியூ இந்தியா அசூரன்ஸ், ஐசிஐசிஐ லோம்பர்டு, எச்டிஎப்சி இஆர்ஜிஓ, டாடா ஏஐஜி, டிஜிட், ஆக்கோ ஆகிய நிறுவனங்கள் தற்போது இந்த ரக இன்சூரன்ஸ்களை வாகன விற்பனை டீலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

இதில் நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு எந்த நிறுவனத்தின் பிரிமியம் குறைவாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சேவை எந்த அளவிற்கு உங்களுக்கு வசதியாக இருக்கிறது. என்பதை நீங்களே இணையதளங்களில் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

தற்போது உள்ள சட்டப்படி மோட்டார் வாகன காப்பீடு என்பது மூன்றாம் நபருக்கான காப்பீடே அவசியமாகிறது. ஆனால் சொந்த சேதார காப்பீடு, மற்றம் தேய்மான காப்பீடு, இன்ஜின் பாதுகாப்பு காப்பீடு ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கான கால அளவுகளை இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்களே முடிவு செய்கிறது.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

இன்சூரன்ஸ் நிறுவனம் தனியாக நீண்ட காலத்திற்கான மூன்றாம் நபருக்கான காப்பீட்டை மட்டுமோ அல்லது மூன்றாம் நபருக்கான காப்பீட்டுடன் சொந்த வாகன சேதாரத்திற்கான காப்பீட்டையோ சேர்த்து வழங்கலாம். இதில் கார்களுக்கு மூன்று ஆண்டுகளும், பைக்குகளுக்கு ஐந்து ஆண்டுகளும் மூன்றாம் நபருக்கான காப்பீடு மட்டுமே அவசியம். சொந்த வாகன காப்பீடு ஒரு ஆண்டிற்கு கூட இருக்கலாம்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

சொந்த வாகன காப்பீட்டு தொகை காரின் மாடல் இன்ஜின் திறன் ஆகியவற்றை பொருத்து மாறுபடும். நீண்ட கால காப்பீட்டு திட்டத்தில் சில லாபங்களும் உள்ளன. முக்கிய பைக்குகளுக்கா காப்பீட்டில் லாபம் உள்ளது.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு பெருவதை விட மொத்தமாக காப்பீடு பெற்றால் குறைந்த செலவாகும். அதவாது ஒவ்வொரு ஆண்டாக காப்பீடு பெற 1000 ரூபாய் செலவாகிறது என்றால் இதற்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகும்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

அதே நேரத்தில் சில இழப்புகளும் உள்ள தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்சிபி (நோ கிளைம்ப் போனஸ்) என்ற ஒரு சலுகையை வழங்கி வருகிறது. அதாவது கடந்தாண்டு நீங்கள் காப்பீடு பெற்று விட்டு அதை கிளம்ப் செய்யவில்லை என்றால் இந்தாண்டு பெறும் காப்பீட்டில் உங்களுக்கு 20-50 சதவீத தள்ளுபடியை அந்நிறுவனம் வழங்குகிறது. அதை இனி நிறுவனங்கள் நிறுத்தலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

அதே நேரத்தில் ஐசிஐசிடு லாம்போர்டு காப்பீடு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த நீண்ட கால காப்பீட்டில் வாடிக்கையாளர்கள் இரட்டை என்சிபி பலன்களை பெறமுடியும். தற்போது வாங்கப்படும் கா்பீட்டிற்கு என்சிபி போனஸ் வழக்கம் போல் வழங்கப்படும்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

மேலும் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பின் அவர்களது என்சிபியை மட்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என திட்டம் வகுத்துள்ளோம். அரசிடம் இது குறித்து அனுமதியை வேண்டியுள்ளோம். அது கிடைத்து விட்டால் இதற்கும் தீர்வு கிடைக்கும். என கூறினார்.

காப்பீடிற்கு எவ்வளவு செலவு ஆகும்?

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

எது சிறந்த காப்பீடு?

காப்பீட்டில் மூன்றாம் நபருக்கான காப்பீடு மற்றும் சொந்த வாகன காப்பீட்டை இணைத்து வாங்குவதை எந்த திட்டத்தை தேர்வு செய்வது என்பது பலருக்கு குழப்பமாக இருக்கும். மூன்றாம் நபருக்கானக காப்பீடு கட்டாயமாகிவிட்ட நிலையில் அதை நீண்ட காலத்திற்கு உள்ள காப்பீட்டையே பெற வேண்டும்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

ஆனால் சொந்த வாகன காப்பீடு கட்டாயம்மில்லை. அதை தேர்தடுக்கும் முன் உங்கம் வாகனம் குறித்து கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவாக இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கும் வாய்ப்பு கொண்டவை அதனால் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீட்டை வழங்குவதுதான் சிறந்தது. மேலும் ஒவ்வொரு ஆண்டாகவாங்குவதை காட்டிலும் மொத்தமாக வாங்குவது விலை குறைவும் கூட

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

கார்களுக்கான சொந்த வாகன காப்பீடு பற்றி பேசும் போது நீண்டகால மூன்றாம் நபருக்கான காப்பீடுடன் ஓராண்டிற்கான சொந்த வாகன காப்பீடும், அல்லது மூன்றாம் நபருக்கான காப்பீடு கால அளவிலேயே சொந்த வாகனங்களுக்கான காப்பீடு வழங்கும் திட்டம் இருப்பதாகவும், இரண்டுமே நீண்ட காலத்திற்கு இருக்கும் திட்டத்தை தேர்வு செய்வது தான் சரியான தேர்வாக இருக்கும் என காப்பீடு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வாகனங்களுக்கு எந்த இன்சூரன்ஸ் பெஸ்ட்?

புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு டீலர்கள் மூலமாவே இன்சூரன்ஸ்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் வாகனங்கள் வாங்கும் முன் அதை ஒப்பீட்டு செய்து பார்க்க வேண்டியது அவசியம். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் அதில் பிக்கப், டிராப் வசதிகளையும் வழங்குகிறது. உங்களுக்கு தகுந்த இன்சூரன்ஸை பெற்றுக்கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Which insurance scheme will suit for your new vehicle?. Read in Tamil
Story first published: Monday, October 1, 2018, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X