பிரிமியம் செக்மென்ட்டில் பவர்ஃபுல் எஸ்யூவி கார் எது தெரியுமா?

Written By:

எஸ்யூவி கார்களின் மீதான மோகம் வெகுவாக அதிகரித்து வருவதற்கு கட்டுமஸ்தான உடல் அமைப்பும், அதன் செயல்திறன் மிக்க எஞ்சினும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல் எது என்பதை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

இப்போது ரூ.6 லட்சத்திலிருந்தே எஸ்யூவி மாடல்கள் கிடைத்தாலும், முழுமையான எஸ்யூவி வகையறாக்கள் என்று எடுத்துக் கொள்ளும்போது அது ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் உள்ள பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டிலேயே போய் நிற்கிறது. ஆன்ரோடு, ஆஃப்ரோடில் மிகச் சிறந்த எஸ்யூவி மாடல்களை எடுத்துக் கொண்டுள்ளோம். சொகுசு எஸ்யூவி வகையறாக்களை எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

இந்த செக்மென்ட்டில் இசுஸு எம்யூஎக்ஸ், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஹூண்டாய் சான்டா ஃபீ மற்றும் மிட்சுபிஷி பஜேரோ உள்ளிட்ட மாடல்கல் போட்டி போடுகின்றன. இதில், ஒவ்வொரு மாடலின் எஞ்சின் ஆற்றல் குறித்த விபரத்தை கொடுத்துள்ளோம்.

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

எஸ்யூவி பிரியர்களை அதிகம் கவர்ந்த மிட்சுபிஷி பஜேரோவிற்கு மாற்றாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 176 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

இந்த எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. ரூ.32.12 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. இசுஸு எம்யூ-எக்ஸ்

02. இசுஸு எம்யூ-எக்ஸ்

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

இந்த எஸ்யூவி 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் கிடைக்கிறது. அராய் சான்றுபடி இந்த எஸ்யூவி 13.8 கிமீ மைலேஜ் தரும் என்பது தகவல். ரூ.28.98 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 03. ஃபோர்டு எண்டெவர்

03. ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கிறது. இரண்டு எஞ்சின்களுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. சக்திவாய்ந்த 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ரூ.38.42 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. டொயோட்டா ஃபார்ச்சூனர்

04. டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்த ரக எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 2.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

ஆனால், இந்த ரகத்தில் டீசல் எஞ்சின்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதன்படி, இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

இந்தியாவின் பவர்ஃபுல் பிரிமியம் எஸ்யூவி கார் எது தெரியுமா?

இந்த மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைப்பதோடு, 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் தேர்வுகளிலும் வருகிறது. ரூ.38.16 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

இந்த செக்மென்ட்டில் மிக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்ற பெருமையை ஃபோர்டு எண்டெவர் பெறுகிறது. போட்டியாளர்கள் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளின் டாப் வேரியண்ட்டுகளில் விலையில் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இல்லை.

English summary
Which Is The Most Powerful SUV Model In India?
Story first published: Friday, March 9, 2018, 11:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark