மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

எதிர்காலத்தில் மாருதி நிறுவனத்திற்கு நேர் போட்டியாளராக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாறும் என்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டும், டாடா 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார் கான்செப்டும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேற லெவலுக்கு சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. அதேநேரத்தில், மாருதி, ஹூண்டாய் நிறுவனங்கள் காட்சிப்படுத்தியிருந்த மாடல்கள் எல்லோரையும் வெகுவாக கவரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் புதிய பரிமாணத்திலும் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை தக்க வைக்கும் விதத்திலும் அமைந்து வருகிறது. அதேநேரம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் வல்லமையும், பொறியியல் திறனும் வெகுவாக மேம்பட்டு வருவது மாருதி நிறுவனத்துக்குத்தான் கடும் குடைச்சலை கொடுக்கும் விஷயம்.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு ஹூண்டாய் நிறுவனம்தான் போட்டியாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் மாருதிக்கு மட்டுமல்ல, ஹூண்டாய்க்கும் சேர்த்து நேர் போட்டியாக வரப்போவது டாடாதான் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக ஆட்டோ எக்ஸ்போ மாறி இருக்கிறது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

அதிக சர்வீஸ் மையங்கள் கொண்ட கார் நிறுவனம் என்ற நற்பெயர்தான் மாருதி வர்த்தகத்துக்கு மிக முக்கிய காரணம். அதேநேரத்தில், அந்நிறுவனம் புதிய கோணத்தில் கார்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்திலும், தரமான கட்டமைப்புடைய கார்களை கொண்டு வர வேண்டும் என்ற ஆதங்கமும் வாடிக்கையாளர்களிடம் உள்ளது.

Recommended Video

Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

எடை குறைப்புக்காக பல்வேறு புதிய கட்டமைப்பு தாத்பரியங்களுக்குள் மாருதி நுழைந்தாலும், பாதுகாப்பு அம்சங்களில் டாடா கார்களின் பாதுகாப்பு தரம் வெகுவாக மேம்படுத்தப்பட்டு வருவதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

நீண்ட காலமாக ஒரே பிராண்டில் விற்பனை செய்வது மாருதி நிறுவனத்துக்கு போக போக பின்னடவை தரலாம். அதுபோலவே, அரைத்த மாவே அரைப்பது போல, எஞ்சின் ஆப்ஷன்களிலும், எஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

மறுபுறத்தில் டாடா எஞ்சின்களை மேம்படுத்தி வருவதுடன், புதிய தொழில்நுட்பத்திலான நவீன எஞ்சின் பிளாட்ஃபார்ம்களை உருவாக்குவதிலும் அதி தீவிரம் காட்டி வருகிறது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

குறிப்பாக, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டின் வெளிப்புற தோற்றம் மட்டுமின்றி, உட்புற வடிவமைப்பு வேற லெவலுக்கு சென்றுகொண்டிருப்பதை காட்டுகிறது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

ஆட்டோ எக்ஸ்போவில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் மின்சார கார்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், மின்சார கார் மாடல் குறித்த கான்செப்ட் மாடல் எதையும் மாருதி நிறுவனம் காட்சிக்கு கொண்டு வரவில்லை. இதுகூட பரவாயில்லை.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

இதுகுறித்த அறிவிப்பு எதையும் கூட மாருதி வெளியிடவில்லை என்பது ஏமாற்றம்தான். தொடர்ந்து, பெட்ரோல் மாடல்களை வைத்து மார்க்கெட்டை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

மறுபுறத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ மற்றும் டீகோர் கார்களின் மின்சார மாடல்களை டாடா காட்சிக்கு வைத்திருந்தது. இதில், டீகோர் காரின் உற்பத்தி கூட துவங்கிவிட்டது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

மஹிந்திரா நிறுவனமும், அடுத்த ஓர் ஆண்டில் தனது மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

டாடா நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகள் மற்றும் ஷோரூம்களை நவீனப்படுத்தும் போக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் எதிரொலியாக டாடா டியாகோ காரின் விற்பனை மிக கணிசமாக உயர்ந்து வருகிறது.

மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல... டாடாதான்... !!

டாடா பிராண்டு மீது வாடிக்கையாளர்களுக்கு இருந்த மோசமான பிம்பத்தை டியாகோ கார் மெல்ல குறைத்து வருகிறது. இதுவும் பிற டாடா கார்கள் மீது வாடிக்கையாளர் கவனம் திரும்ப வகை செய்யும் விஷயம். டாடா நிறுவனத்தின் விற்பனைக் கொள்கைகளும், வாடிக்கையாளர் சேவை தரமும் தொடர்ந்து மேம்பட்டால், மாருதிக்கு நேர் போட்டி ஹூண்டாய் அல்ல. அது டாடாதான் என்று கூற முடியும்.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

இதுவரை கார்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் விடைபெற்று வருகின்றன. அவ்வாறு மறைந்து வரும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. மேனுவல் கியர்பாக்ஸ்

01. மேனுவல் கியர்பாக்ஸ்

வரும் காலங்களில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள் வழக்கொழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களின் விற்பனை சதவீதம் பாதியாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த பிக்கப் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பாக இருப்பதால், ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதே முக்கிய காரணம்.

சாவி கொத்து

சாவி கொத்து

இனி சாதாரண சாவி போட்டு காரை ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பமும் பல மாடல்களில் விடைபெற்று வருகிறது. இதற்கு பதிலாக கைக்கு அடக்கமான ஸ்மார்ட் சாவி கார்களில் இடம்பெற்றுவிடும்.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

இந்த ஸ்மார்ட் சாவியுடன் காருக்கு அருகில் வந்தாலே கார் கதவுகள் தானாக திறந்து விடும். பூட் ரூம் மூடியையும் திறக்கலாம். கார் எஞ்சினை புஷ் பட்டன் ஸ்டார்ட் மூலமாக ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும்.

ரேடியோ ஆன்டெனா

ரேடியோ ஆன்டெனா

ரேடியோவுக்கு சிக்னல் பெறுவதற்காக கூரையில் கொடுக்கப்படும் ஆன்டெனா இனி வரும் கார் மாடல்களில் இருக்காது.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

ஜிபிஎஸ் வசதி மற்றும் ரேடியோவுக்கு சிக்னல் தரும் சுறா துடுப்பு போன்ற புதிய ஆன்டெனா இப்போது வரும் கார்களில் இடம்பெறுகிறது.

ஸ்பேர் வீல்

ஸ்பேர் வீல்

கார்களில் இடவசதியை அதிகரிக்கும் விதத்தில், இனி முழுமையான ஸ்பேர் வீல் கார்களில் கொடுக்கப்படாது.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

ட்யூப்லெஸ் டயரை பஞ்சர் செய்து ஓட்டுவதற்கான கிட்டும், குறைந்த இடத்தில் பொருத்துவதற்கான ஸ்பேர் வீலும் கொடுக்கப்படும்.

ஹேண்ட்பிரேக்

ஹேண்ட்பிரேக்

ஹேண்ட்பிரேக் லிவருக்கு பதிலாக, பட்டனை அழுத்தி ஹேண்ட்பிரேக் போடும் வசதி இனி இடம்பெறும்.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களில் பார்க்கிங் பிரேக் என்ற பெயரில் இந்த வசதி பரவலாக கொடுக்கப்படுகிறது.

பெஞ்ச் இருக்கை

பெஞ்ச் இருக்கை

பழைய கார்களில் பெஞ்ச் இருக்கைகள்தான் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், இனி புதிய கார்களில் பெஞ்ச் இருக்கைகளுக்கு வேலை இருக்காது.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

முன் வரிசையில் மட்டும் பக்கெட் இருக்கைகள் கொடுக்கப்படுகிறது. இனி பின் இருக்கைகளும் தனித்தனியாக கொடுக்கும் வழக்கம் துவங்கும்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

கார்களில் மியூசிக் சிஸ்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த வசதிகளை தரும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பிடிக்கும்.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

வரும் காலங்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அடிப்படை வசதியாக மாறிவிடும். பொழுதுபோக்கு வசதி, நேவிகேஷன் வசதி, கட்டுப்பாட்டு வசதிகளை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெற முடியும்.

கார்களில் வழக்கொழிந்து வரும் 8 முக்கிய விஷயங்கள்!

சொகுசு கார்களில் இங்கே வழங்கப்பட்டிருக்கும் பல நவீன தொழில்நுட்பங்களும், வசதிகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த சூழலில், பட்ஜெட் கார்களிலும் இந்த மாற்றங்களை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பார்க்க முடியும்.

Most Read Articles
English summary
Who Will Be The Direct Competitor For Maruti In Future?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X