மாருதி, ஹோண்டாவை மிரட்டும் ஹூண்டாய்.. அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இதுதான்..
லான்ச் செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குள்ளாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எலைட் ஐ20 கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
லான்ச் செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குள்ளாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட எலைட் ஐ20 கார்களை விற்பனை செய்து ஹூண்டாய் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காராக எலைட் ஐ20 உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் 2ம் தலைமுறை ஐ20 கார், (எலைட் ஐ20) கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குள், அரை மில்லியனுக்கும் அதிகமான (5 லட்சத்திற்கும் மேற்பட்ட) எலைட் ஐ20 கார்களை விற்பனை செய்து, ஹூண்டாய் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை எலைட் ஐ20 பெற்றுள்ளது. லான்ச் செய்யப்பட்டது முதல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 10 ஆயிரம் எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

எலைட் ஐ20 காரின் விற்பனை எண்ணிக்கை குறைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எலைட் ஐ20 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் புதிதாக சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்சும் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால்தான் மாருதி பலினோ மற்றும் ஹோண்டா ஜாஸ் என பலத்த போட்டிக்கு மத்தியிலும், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனை வலுவாக உள்ளது. இதனால் ஹூண்டாய் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.

1.2 லிட்டர் விடிவிடி பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் U2 டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் 2 விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது.

அதேநேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி சீறிப்பாயும். பெட்ரோல் இன்ஜினில் 5 ஸ்பீடு, டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

தற்போது பெட்ரோல் இன்ஜினில், சிவிடி ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. எலைட் ஐ20 காரின் பிரீமியம் இன்டீரியர்கள், ஷார்ப் ஸ்டைலிங், எக்கச்சக்கமான வசதிகள் ஆகியவையே அதன் விற்பனையை தூக்கி பிடிக்கின்றன.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் 5.34 லட்ச ரூபாய் முதல் 7.90 லட்சம் வரையிலும், டீசல் வேரியண்ட்கள் 6.73 லட்ச ரூபாய் முதல் 9.15 லட்ச ரூபாய் வரையிலான டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மொத்தம் விற்பனையான 5 லட்சம் எலைட் ஐ20 கார்களில், 60 சதவீதம் டீசல் வேரியண்ட்கள்தான். எஞ்சிய அனைத்தும் பெட்ரோல் வேரியண்ட் கார்கள். சிடிவி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டிருப்பதால், பெட்ரோல் வேரியண்ட்களின் விற்பனையும் சூடுபிடிக்கும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது.

ஐ20 காரின் புதிய 3ம் தலைமுறை வெர்ஷனை வரும் 2020ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையிலும் எலைட் ஐ20 அதன் பேஸ்லிப்டட் பார்மில் தொடரும்.

உலகம் முழுவதும் அதிக அளவில் விற்பனையாகும் ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய ரக கார்களில் ஒன்றாகவும் எலைட் ஐ20 திகழ்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








