டொயோட்டாவின் லாபம் இவ்வளவு கோடிகளா? பிரம்மாண்ட சாதனையால் போட்டி நிறுவனங்களுக்கு தலை சுற்றல்...
முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, லாபம் ஈட்டுவதில் பிரம்மாண்டமான புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனால் அதன் போட்டி நிறுவனங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.
முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா, லாபம் ஈட்டுவதில் பிரம்மாண்டமான புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனால் அதன் போட்டி நிறுவனங்களுக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா. இதன் இந்திய துணை நிறுவனம் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ். இந்நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களின் விற்பனை இந்தியாவில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் நல்ல லாபம் அடைந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2017-18ம் நிதியாண்டில், டொயோட்டா நிறுவனம் 965 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பதாக ET Auto தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-18ம் நிதியாண்டில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 1,40,645 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய 2016-17ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 2017-18ம் நிதியாண்டில், டொயோட்டா நிறுவனம் மொத்தம் 18,998.09 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய 2016-17ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவு என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

அதாவது 2016-17ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18ம் நிதியாண்டில், டொயோட்டாவின் கார்கள் விற்பனை மற்றும் ஒட்டுமொத்த வருவாய் என இரண்டும் சரிவை சந்தித்திருக்கின்றன. இருந்தபோதும் 2017-18ம் நிதியாண்டில் டொயோட்டா நிறுவனத்தின் லாபம் 965 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Recommended Video


2016-17ம் நிதியாண்டில் டொயோட்டா நிறுவனத்தின் லாபம் 557 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் டொயோட்டா நிறுவனத்தின் லாபம் 965 கோடி ரூபாய். லாபம் என்கிற அடிப்படையில் பார்த்தால் இது 73 சதவீத வளர்ச்சியாகும்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் ஈட்டிய மிக அதிகபட்ச லாபம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4 நிதியாண்டுகளாக டொயோட்டா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

2016-17, 2017-18 நிதியாண்டுகளுக்கு முந்தைய 2 நிதியாண்டுகளிலும் டொயோட்டா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கு மேல்தான் லாபம் ஈட்டியிருந்தது. இதற்கு இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்கள்தான் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.

லாபம் ஈட்டுவதில் புதிய சாதனை படைத்துள்ள டொயோட்டா நிறுவனம், வாடிக்கையாளர்களுடன் சேர்த்து இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








