மகளிர் தின ஸ்பெஷல்: பெண்களுக்கான 10 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்!

இன்று சர்வதேச மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற 10 சிறந்த கார்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இன்று சர்வதேச மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் இந்த தினத்தில், இன்று குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகரான பணிகளை கையிலெடுத்து செவ்வனே செய்து வரும் பெண்களுக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

 மகளிர் தின ஸ்பெஷல்: பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த 10 கார்கள்!

கல்லூரி, அலுவலகம், குழந்தைகளை பள்ளியில் விடுவது என றெக்கை கட்டி பறந்து வரும் பெண்கள் அடுத்தவரை எதிர்பாராமல் சுலபமாக சென்று வருவதற்கு இன்று அவர்களுக்கென தனி வாகனம் இருப்பது அவசியமாகியுள்ளது. பெண்கள் எளிதாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்களின் விபரங்களை வழங்கியிருக்கிறோம். அவரவர் பட்ஜெட், விருப்பத்திற்கு ஏதுவான அனைத்து பிராண்டுகளில் பெண்களுக்கு பொருத்தமான புதிய கார் மாடல்களின் விபரங்களை பார்க்கலாம்.

01. டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

01. டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு க்ளட்ச் பெடல் தொல்லை இல்லாத ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடலும் நானோ என்பது மனதில் வையுங்கள். லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தருவதும் நகர்ப்புற பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதே. பவர் ஸ்டீயரிங், மியூசிக் சிஸ்டம், சார்ஜர் போன்ற வசதிகளும் இருக்கிறது. சென்னையில் ரூ.3.52 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. டட்சன் ரெடிகோ ஏஎம்டி

02. டட்சன் ரெடிகோ ஏஎம்டி

டட்சன் ரெடிகோ ஏஎம்டி காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும்,91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தரை இடைவெளி இருப்பதால், பெண்கள் எளிதாக ஓட்ட முடியும். ரூ. 4.28 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. ரெனோ க்விட் ஏஎம்டி

03. ரெனோ க்விட் ஏஎம்டி

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலாக வலம் வரும் ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடலும் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும். பிரிமியம் கார் போன்ற தோற்றம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகள், போதுமான இடவசதி இந்த காருக்கு வலு சேர்க்கிறது. டட்சன் ரெடிகோ காரில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் இந்த காரிலும் இருக்கிறது. ரூ.4.57 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. டாடா டியாகோ ஏஎம்டி

04. டாடா டியாகோ ஏஎம்டி

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக டாடா டியாகோ கார் மாறி இருக்கிறது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. ரூ.5.53 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

05. மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி

05. மாருதி ஆல்ட்டோ கே10 ஏஎம்டி

மாருதி ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடல் அனைத்து விதத்திலும் பெண்களுக்கு சிறந்த சாய்ஸ் என்று கூற முடியும். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தக்க விஷயம். மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சம். டாப் வேரியண்ட்டில் ஆப்ஷனலாக ஏர்பேக்கும் கிடைக்கிறது. ரூ.4.81 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 06. மாருதி செலிரியோ ஏஎம்டி

06. மாருதி செலிரியோ ஏஎம்டி

ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வந்த முதல் கார் மாடல். டிசைன், வசதிகள், மைலேஜ் என அனைத்திலும் நிறைவை தரும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. லிட்டருக்கு 23.01 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. விற்பனையிலும் சிறப்பாக உள்ளது. மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் குறைவான பராமரிப்பு செலவீனம் இதற்கு வலுசேர்க்கின்றது. சென்னையில் ரூ.5.76 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

07. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

07. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறப்பான டிசைன், ஏராளமான வசதிகள், சிறந்த மறுவிற்பனை மதிப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் என கண்ணை மூடிக் கொண்டு வாங்கக்கூடிய மாடல். இதன் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 16.95 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.7.08 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

08. மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி

08. மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி

அண்மையில் விற்பனைக்கு வந்த மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி கார் பெண்களுக்கு சிறந்த சாய்ஸாக அமையும். இந்த கார் இருபாலரும் ஓட்ட முடியும் என்பதால், இரண்டு கார்களின் அவசியத்தையும் தவிர்க்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜையும் தரும். ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இந்த கார் ரூ.7.02 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

09. ஹோண்டா ஜாஸ் சிவிடி

09. ஹோண்டா ஜாஸ் சிவிடி

டிசைன், வசதிகள், இடவசதியில், நம்பகமான ஹோண்டா எஞ்சின் போன்ற பல வலுவான காரணங்கள் கொண்ட ஹோண்டா ஜாஸ் காரின் சிவிடி மாடல் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது. எனவே, இரு பாலருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சிவிடி மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.8.56 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

10. மாருதி பலேனோ சிவிடி

10. மாருதி பலேனோ சிவிடி

கொஞ்சம் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலை விரும்பும் பெண்களுக்கு மாருதி பலேனோ சிவிடி மாடல் சிறப்பாக இருக்கும். சரியான விலை, அதிக மைலேஜ் தரும் நம்பகமான எஞ்சின், டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் தன்னிறைவை தருகிறது. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.92 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

இதர ஆப்ஷன்கள்

இதர ஆப்ஷன்கள்

விற்பனை குறைவாக இருந்தாலும், பட்ஜெட், பிராண்டு உள்ளிட்டவற்றை மனதில் வைத்து சிலர் கார் வாங்குவார்கள். அவர்களுக்காக சில கூடுதல் தேர்வுகளை தொடர்ந்து காணலாம்.

01. ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக்

01. ஹோண்டா பிரியோ ஆட்டோமேட்டிக்

விற்பனை குறைவாக இருந்தாலும், பெண்களை கவரும் மாடல்களில் ஒன்று. சிறப்பான இடவசதி, நகர்ப்புற சாலை,நெடுஞ்சாலை இரண்டிற்கும் சிறந்த மாடல். சிலருக்கு டிசைன் குறையாக தெரிந்தாலும், ஹோண்டா பிராண்டின் நம்பகத்தன்மை இதற்கு பெரும் பலம். இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இதன் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.7.59 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது. மைலேஜ் குறைவு, பராமரிப்பு செலவு கூடுதல் என்பது குறையாக இருந்தாலும், ஹோண்டா பிரியர்களுக்கும், சிறப்பான சாய்ஸ்.

 02. நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட்

02. நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட்

சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரின் முக்கிய சிறப்பம்சம். சிறப்பான டிசைன், வசதிகள், அதிக மைலேஜ் ஆகியவற்றுடன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட நிசான் மைக்ராவும் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான மாடல்களில் ஒன்று. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் இந்த கார் லிட்டருக்கு 19.44 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.6.84 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

03. ஃபோர்டு ஃபிகோ சிவிடி

03. ஃபோர்டு ஃபிகோ சிவிடி

இதன் ரகத்தில் விலை அதிகம் என்பதால், இதர மாடல்கள் தேர்வில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ சிவிடி புதிய தலைமுறை ஃபிகோ கார் வசதிகளிலும், தொழில்நுட்பத்திலும் தற்போதைய நிலையில் ஓர் சிறப்பான மாடல். கையாளுமை, மைலேஜ், விலை என அனைத்திலும் பொருத்தமாக இருக்கும். இந்த காரின் பவர் டெலிவிரியும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த காரை கணவன், மனைவி என இருவரும் ஓட்டுவதற்கு ஏதுவானதாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானது. சென்னையில் ரூ.9.12 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. ஹோண்டா சிட்டி சிவிடி

04. ஹோண்டா சிட்டி சிவிடி

பிரிமியம் கார் மாடலை விரும்பும் பெண்களுக்கு ஹோண்டா சிட்டி சிறந்த சாய்ஸாக இருக்கும். டிசைன், தரம், வசதிகள், எரிபொருள் சிக்கனம், மறு விற்பனை மதிப்பு என அனைத்திலும் சிறந்த மாடல். இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ரூ.14.03 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

05. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

05. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

எஸ்யூவி மாடல்களை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக அமையும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.10.65 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மகளிர் தின ஸ்பெஷல்: பெண்களுக்கு ஏற்ற 10 சிறந்த கார்கள்!

இலகுவான பவர் ஸ்டீயரிங், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற புதிய கார் மாடல்களை தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியிருக்கிறோம். இந்த பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு மாடல்களுமே ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை. எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு அமையும்.

Most Read Articles
English summary
Top 10 Best Cars For Women 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X