2018ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதிற்கான இறுதிப்பரிந்துரை பட்டியல் வெளியீடு

Written By:

நடைபெற்று வரும் ஜெனீவா மோட்டார் வாகன கண்காட்சியில் உலகின் தலைசிறந்த கார் விருதிற்காக போட்டியிடும் கார் மாடல்களின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

அதன்படி ரேஞ்ச் ரோவர் வேலர், மஸ்டா சி.எக்ஸ்.- 5 மற்றும் வால்வோ எக்ஸ்.சி 60 ஆகிய கார்கள் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த காராக தேர்ந்தெடுக்கப்படும் மாடல் வரும் 28ம் தேதி நடைபெறும் நியூயார்க் வாகன கண்காட்சியில் அறிவிக்கப்படும்.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

கடந்தாண்டில் ஜாகுவார் எஃப்-ஃப்பேஸ் கார் 2017ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் விருதை வென்றது. அதைப்போலவே இந்தாண்டிலும் எஸ்யூவி அல்லது கிராஸோவர் கார் மாடல்கள் தான் விருதை தட்டிச்செல்ல உள்ளன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

இந்த விருதுடன், நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் 2018 சிறந்த நகர கார், உலகின் ஆடம்பர கார், உலகின் சிறந்த பெர்ஃப்பாமென்ஸ் பெற்ற கார் மற்றும் காற்று மாசுவை தடுக்கும் க்ரீன் கார் போன்ற விருதுகளும் அறிவிக்கப்படவுள்ளன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

இதற்கு வேண்டி ஃபோர்டு ஃபியஸ்டா, சுஸுகி ஸ்விஃப்ட், விடபுள்யூ போலோ, ஆடி ஏ8, போர்ஷே கேயென், போர்ஷே பனேமேர்ரா, பிஎம்டபுள்யூ எம்5, ஹோண்டா சிவிக் டைப் ஆர், லக்சஸ் எல்.சி 500, பிஎம்டபுள்யூ 530இ, கிரைஸ்லர் ஃபேசிஃப்பியா ஹைஃப்ரிட், நிஸான் லீஃப் ஆகிய கார்கள் முறையே போட்டியிடுகின்றன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளுக்காக 24 நாடுகளை சார்ந்த 82 சர்வதேசளவிலான தலைசிறந்த ஆட்டோதுறை வல்லுநர்கள் போட்டி இறுதிப்பட்டியலில் உள்ள டாப் 3 கார் மாடல்களை தேர்வு செய்துள்ளனர்.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் சிறந்த கார்:

 • மஸ்டா சி.எக்ஸ்- 5
 • ரேஞ்ச் ரோவர் வேலர்
 • வால்வோ எக்ஸ்.சி 60
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் நகரப்பகுதிகளுக்கான சிறந்த கார்:

 • ஃபோர்டு ஃப்பியஸ்டா
 • சுஸுகி ஸ்விஃப்ட்
 • ஃபோக்ஸ்வேகன் போலோ
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் சிறந்த ஆடம்பர கார்

 • ஆடி ஏ8
 • போர்ஷே கேயென்
 • போர்ஷே பனேமேரா
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் சிறந்த பெர்ஃப்பாமென்ஸ் பெற்ற கார்:

 • பிஎம்டபுள்யூ எம்5
 • ஹோண்டா சிவி டைப் ஆர்
 • லக்சஸ் எல்.சி 500
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் சிறந்த பசுமை முறையில் இயங்கும் கார்:

 • பிஎம்டபுள்யூ 530இ ஐ பெர்ஃப்பாமென்ஸ்
 • கிரைஸ்லர் ஃபேசிஃபியா ஹைஃப்ரிட்
 • நிஸான் லீஃப்
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

2018 உலகின் சிறந்த வடிவமைப்பை பெற்ற கார்:

 • லக்சஸ் எல்.சி 500
 • ரேஞ்ச் ரோவர் வேலர்
 • வால்வோ எக்ஸ்.சி. 60
உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

முன்னதாக குறிப்பிட்டது போலவே எஸ்யூவி மற்றும் கிராஸோவர் கார்கள் தான் தற்போது டிரெண்டு. இதனால் தான் 2018 உலகின் சிறந்த கார் விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இந்த மாடல் கார்களே இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

மேலும் 2017ம் ஆண்டில் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் எஸ்யூவி கார் தான் வெற்றிவாகை சூடியது என்பதால், இந்தாண்டிலும் எஸ்யூவி கார் விருது வாங்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

எதிர்கால வாகன தேவையையும் மற்றும் ஆட்டோதுறை சார்ந்த புதிய டிரெண்டிங்குகளையும் உலகம் அறிந்துக்கொள்ளவே இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

உலகின் சிறந்த கார் விருது- வலுக்கும் வாகனங்கள் யுத்தம்..!!

தற்போது இந்தாண்டிற்கான உலகின் சிறந்த கார் போட்டி உடன் மொத்தம் மற்ற 6 பிரிவுகளுக்கும் போட்டி நடைபெறுகிறது. இதன்மூலம் வாகன துறை ஆர்வலர்கள் மேலும் இந்த துறை சார்ந்த தகவல்களில் பொது அறிவு பெற முடியும்.

English summary
Read in Tamil: 2018 World Car Of The Year Top Three Finalists Announced At Geneva Motor Show0. Click for Details...
Story first published: Thursday, March 8, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark