800 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த உலகின் அதிவேகமான கார்.. அசர வைக்கும் வீடியோ..!
அமெரிக்காவில் உலகின் அதிவேகமாக சுமார் 800 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் காரை டீம் வெஸ்கோ என்ற குழு தயாரித்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமான இது உலகை சாதனையாக அமையவில்லை. ஏன் அமையவில்லை. எப்படி அந்த கார்
அமெரிக்காவில் உலகின் அதிவேகமாக சுமார் 800 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் காரை டீம் வெஸ்கோ என்ற குழு தயாரித்துள்ளது. ஆனால் எதிர்பாராத விதமான இது உலகை சாதனையாக அமையவில்லை. ஏன் அமையவில்லை. எப்படி அந்த கார் இவ்வளவு வேகத்தில் சென்றது பார்க்கலாம் வாருங்கள்.

அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் உள்ள ராக்வில்லே பகுதியில் டீம் வெஸ்கோ என்ற குழு இருக்கிறது. இந்த குழுவிற்கு புதிய ஆட்டோமொபைல் தயாரிப்புகளை தயாரிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த குழு தற்போது உலகின் அதிவேகமான காரை தயாரித்துள்ளது. இது மணிக்கு சுமார் 800 கி.மீ. வேகத்தில் செல்கிறது.

டீம் வெஸ்கோ ஏற்கனவே டர்பினேட்டர் என்ற பெயரில் ஒரு வாகனத்தை தயாரித்திருந்தது. இந்த வாகனம் அதிகபட்ச வேகமாக 775 கி.மீ (482.646mph) வேகத்தில் பயணித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் அதே குழு மீண்டும் புதிய கார் ஒன்றை தயாரித்து சுமார் 800 கிமீ வேகத்தில் பயணிக்க வைத்துள்ளது. இது கடந்த 1ம் தேதி செய்து முடிக்கப்பட்டது.

இந்த கார் நேராக மட்டும் தான் செல்லும். திருப்ப முடியாது. நேராக சென்றால் மட்டுமே அதிக வேகத்தை விரைவாக பிக்கப் செய்ய முடியும் என்பதால் இதை அவ்வாறு அவர்கள் வடிவமைத்துள்ளனர். இது முற்றிலும் சாதனைக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.

கடந்த 1ம் தேதி டேவ் ஸ்பேங்குலர் என்பவர் இந்த காரை இயக்கினார். இது சுமார் 5000 குதிரை திறன் சக்தியை வெளிப்படுத்தக்கூடியது. இதனால் அவர் இயக்கத்துவங்கியதும் மெதுவாக வேகம் அதிகரித்து அதிகபட்சமாக 503 Mph (சுமார் 800 கிமீ) வேகத்தில் பறந்தது.

எனவே மறுநாள் இதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அன்று மழை பெய்ததால் அந்த இடத்தில் ஈரம் இருந்ததன் காரணமாக இந்த வேகத்தை அவர்களால் எட்ட முடியவில்லை. ஆனால் அவர்கள் முதலில் செய்த 503 mph (800 கிமீ.) வேகத்தின் பதிவு மட்டும் இருக்கிறது.

அதனால் இந்த கார் உலக சாதனை பட்டியலில் இடம் பெறவில்லை. இருந்தாலும் இதன் வேகம் உண்மையாக இருந்தால் உலகிலேயே அதிவேகமான கார் இதுவாகதான் இருக்கும்.

இந்த கார் பயணத்தின் போது சுமார் 12 கி.மீ. தூரத்தை 2 நிமிடம்19 நொடிகளில் அடைந்தது. இந்த சாதனை படைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த காரை சாதாரணமா ரோட்டில் இயக்க முடியாது. இதன் நீளம் சுமார் 36 அடியாகும். இதன் வீல் பேஸ் 21' , மேலும் இது 16 ஆயிரம் ஆர்பிஎம்மில் இயங்க்கூடியது. இதன் மொத்த எடை 4950 lb கிட்டத்தட்ட ஒரு பெர்பாமென்ஸ் காரின் எடை தான் இது .

இந்த கார் தான் இன்டர்டர்னல் கம்பஷன் இன்ஜின் கொண்டு இயங்கும் அதிகவேகமாகன காராகும். மேலும் இந்த காரில் அட்வான்ஸ் டர்பைன் சர்வீஸ் எனும் தொழிற்நுட்பம் மூலம் தான் 5000 குதிரை திறன் சக்தியை பெற்றுள்னளர்.


Click it and Unblock the Notifications