விற்பனைக்கு வந்தது உலகின் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

சர்வதேச ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஃபேகர் ஹெல்மெட்ஸ் நிறுவனம் உலகின் முதல் ஏசி ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. பைக்கில் உள்ள பேட்டரி மூலமே இந்த ஹெல்மெட் இயங்க்கும் 3000mAh பேட்டரி முழு சார்ஜில் 2 மணி நேர

By Balasubramanian

சர்வதேச ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஃபேகர் ஹெல்மெட்ஸ் நிறுவனம் உலகின் முதல் ஏசி ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. பைக்கில் உள்ள பேட்டரி மூலமே இந்த ஹெல்மெட் இயங்க்கும் 3000mAh பேட்டரி முழு சார்ஜில் 2 மணி நேரமும், 12,000 mAh பேட்டரிையின் முழு சார்ஜில் 6 மணி நேரமும் இந்த ஹெல்மெட் வேலை செய்யும்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இன்று நாடு முழுவதும் ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. தமிழகத்திலும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என சமீபத்தில் போலீசார் கூறி இதற்கான நடவிடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றனர்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் போதுவதற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஹெல்மெட் போடுவதால் வரும் சில பிரச்னைகள் தான். பெரும்பாலானோருக்கு ஹெல்மெட் போடுவதால் முடிக்கொட்டுதல், பொடுகு பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனாலேயே பலர் ஹெல்மெட்டை போட மறுக்கின்றனர்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் ஹெல்மெட்டிற்குள் ஏற்படும் வெப்பம் தான் அங்கு அதிக வெப்பம் இருப்பதால் அது தலைக்கு ஒத்துக்கொள்ளாமல் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. தற்போது இதற்கு எல்லாம் தீர்வாக ஏசி ஹெல்மெட் தற்போது மார்கெட்டிற்கு வந்துள்ளது.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

அது என்ன ஏசி ஹெல்மெட் என கேட்கிறீர்களா? தெர்மோ எலெக்ட்ரிக் என்ற தொழிற்நுட்பத்தில் தான் இந்த ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அந்நிறுவனம் பேட்டன் பெற்ற டியூலர் ஸ்பேஸியஸ் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஏசிஎச்-1 என்ற கம்போர்ட் லைன்ர் ஹெல்மெட்டிற்குள் குறைந்த அளவு வெப்பத்தை வைக்க உதவுகிறது.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இந்த ஹெல்மெட்டிற்குள் இருக்கும் வெப்பம் வெளியில் உள்ள வெப்பதிற்கு ஏற்ப மாறுபட்டு கொண்ட இருக்கும். வெளியில் உள்ள வெப்பத்தில் இருந்து சுமார் 10-15 டிகிரி வரை வெப்பம் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் பைக்கில் செல்லும் போது செளகரியமான அனுபவத்தை தரும்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இந்த ஹெல்மெட்டில் உள்ள ஏசி நாம் செல்லும் பைக்கில் உள்ள பேட்டரியின் மூலம் இயங்கும். இதற்காக ஹெல்மெட் உடன் ஹெல்மெட் மற்றும் பேட்டரியை இணைக்கும் இயந்திரம் வழங்கப்படும். இது மட்டும் இல்லாமல் இந்த ஹெல்மெட்டில் தனியாக 12 V பேட்டரியை பொருத்தியும் இயக்க வைக்கலாம்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

ஹெல்மெட்டை பைக் பேட்டரியுடன் பொருத்த விரும்பாதவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இதற்காக பேட்டரியை வெளியில் தான் வாங்க வேண்டும்.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இந்த ஹெல்மெட்டிற்கு 3000mAh திறன் கொண்ட பேட்டரி 2 மணி நேரமும், 12,000 mAh திறன் கொண்ட பேட்டரி 6 மணி நேரமும் திறனை வழங்கும். இந்த ஹெல்மெட் முழுமையாக பைபர் கிளாஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்தது உலகில் முதல் ஏசி ஹெல்மெட்…. வெயில் தொல்லை இனி இல்லை...

இந்த ஹெல்மெட் ஏசி பொருத்தப்பட்ட பின்பும் குறைந்த எடையிலேயே இருக்கிறது. மொத்தமாக இந்த ஹெல்மெட் 1,450 கிராம்களை தன் எடையாக கொண்டுள்ளது. இந்த ஏசிஎச் -1 ஹெல்மெட் டாட், இசிஇ 22.05 சர்டிபிகேட் பெற்றது. இந்தியாவில் விற்பனையாகும் உயர் ரக ஹெல்மெட்டில் இதுவும் ஒன்று.

இந்த ஹெல்மெட் இந்திய மதிப்பின் படி ரூ 42,000 என மதிப்பிடப்பட்டுள்ளுது. இது இந்தியாவில் விற்பனையாகும் உயர் ரக ஹெல்மெட்களின் சராசரி விலை தான். இந்த ஹெல்மெட்டில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது பெரும்பாலனோரின் கவனத்தை இந்த பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளுக்கு இந்த ஹெல்மெட் மிகவும் ஏற்றது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Feher ACH-1 Helmet — The World’s First Self-Contained Air-Conditioned Helmet. Read in Tamil
Story first published: Wednesday, August 29, 2018, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X