ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

By Saravana Rajan

ஏசி வசதியுடன் கூடிய உலகின் முதல் மின்சார வீல் சேர் மாடலை பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

ரேஸ் கார்களை ட்யூனிங் செய்து கொடுப்பதில் பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் பிரதாப் ஜெயராம் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் முக்கிய பிரபலமாகவும் விளங்குகிறார்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

ரேவா எலக்ட்ரிக் கார்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் தற்போது மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மின்சார கார் தயாரிப்பிலும் நல்ல அனுபவம் வாய்ந்த பிரதாப் ஜெயராம் தனது மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் மூலமாக புதிய மின்சார வீல் சேர் மாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

ஏசி வசதியுடன் கூடிய உலகின் மின்சார சக்கர நாற்காலியாக இதுவாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு, இந்த வாகனத்தின் படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

நான்கு சக்கரங்களுடன் கூடிய இந்த சக்கர நாற்காலியை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இதனை கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவிற்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

இந்த மின்சார சக்கர நாற்காலியில் பின்னால் இரண்டு பெரிய சக்கரங்களுடனும், முன்னால் இரண்டு சிறிய சக்கரங்களுடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வசதியான இருக்கையும், அதற்கு கீழே பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

சாய்தளங்களில் கூட இலகுவாக ஏறி, இறங்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றையும் விட, இந்த வீல் சேரில், தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தை பிரதிபலிக்கும் விதத்தில், ஸ்பாய்லர் ஒன்றையும் கொடுத்துள்ளார். இதுதான் இந்த வீல் சேரின் ஹைலைட்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

வலது பக்க ஹேண்ட் ரெஸ்ட்டில் திருப்புவதற்கான ஜாய் ஸ்டிக் ஸ்டீயரிங் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது இயக்குவதற்கு இலகுவாக இருக்கும்.

ஏசி வசியுடன் உலகின் முதல் மின்சார வீல் சேர்: மந்த்ரா ரேஸிங் நிறுவனம் அசத்தல்!

இந்த வீல் சேர் குறித்த பிரதாப் ஜெயராம் பதிவிற்கு ஏராளாமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிலர் இதுபோன்ற வீல் சேர் செய்து தர முடியுமா என்றும் வினவி வருகின்றனர். முதியோர் மற்றும் விபத்துக்களில் காயம் பட்டவர்களுக்கு இந்த வீல் சேர் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Source: Mantra Racing

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு என்றே பெரிய வாடிக்கையாளர் வட்டம் உண்டு.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் தயாராகி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு மத்திய அரசு சுங்க வரி விதித்து வருகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

அதனடிப்படையில் 800சிசி திறன் பெற்ற வாகனங்களுக்கு அதன் விலையிலிருந்து 60 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது. 800சிசி-க்கு மேற்பட்ட திறன் கொண்ட வாகனங்களுக்கு அவற்றின் விலையிலிருந்து 75 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

இந்நிலையில் அமெரிக்காவின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகளில் வசூலிக்கப்படும் வரி வதிப்பை குறித்து கருத்து கூறினார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

அமெரிக்காவின் தயாரிப்புகள் சில நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதை குறிப்பிட்ட நாடுகளும் உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கா நுழைவதற்கு ஏராளமான வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

தொடர்ந்து அவர், இந்தியாவில் ஹார்லிட் டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத இறக்குமதி வரி வசூலிக்கப்படுவதை குறித்து கருத்து தெரிவித்தார். இந்த பைக்குகளுக்கான இறக்குமதி வரியை குறைத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஹார்லி டேவிட்சன் வாகனங்களை வங்குவார்கள் என்றார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

இந்தியாவில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு அதன்மூலம் ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகள் பிரபலமானால், அதனால் உற்பத்தி பெருகும். இதன்மூலம் அமெரிக்கா அதிக வருவாய் ஈட்ட முடியும். இதை உணர்த்தவே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

மேலும் இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய போது, இந்தியாவிலிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா வரி வசூலிப்பது கிடையாது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

இறக்குமதி தொடர்பான வரி விதிப்பில் இந்தியா தனது நடைமுறையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

வெளிநாடு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் இறக்குமதி வரி அமெரிக்க அதிபர் டிரம்பை மிகுந்த டென்ஷன் ஆக்கியுள்ளது. அதை தற்போது வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 50 சதவீத வரி விதிப்பதா...?? டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி நிலைப்பாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கு இந்தியாவின் எதிர்வினையை அறிய, டொனால்டு டிரம்போடு ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளது.

Tamil
English summary
World's First Electric Wheel Chair With ac facility.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more