பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளுக்கு பதிலாக 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக அரங்கேறி முடிந்துள்ளன. மகிழ்ச்சியின் திருவிழாவான தீபாவளி என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி இல்லை என்றே சொல்லலாம்.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

பட்டாசுகள் மட்டுமல்லாது தீபாவளி பண்டிகை காலங்களில் சில வேடிக்கையான நிகழ்வுகளும் நடைபெறுவதுண்டு. ஆனால் இதில் ஒரு சில நிகழ்வுகள் போதிய கவனம் பெற தவறி விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான நிகழ்வு டெல்லியில் அரங்கேறியுள்ளது.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

தெற்கு டெல்லியில் உள்ள மதன்கிர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. போதிய இட வசதி இல்லாத காரணத்தால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் தங்களது வாகனங்களை குடியிருப்புகளுக்கு வெளியே நிறுத்துவது வழக்கம்.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

இதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அதிகாலை நேரத்தில், வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவருக்கு சுமார் 20 வயது இருக்கலாம். அவர் உச்சகட்ட குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

அங்கும் இங்கும் உலாவி கொண்டிருந்த அந்த வாலிபர், பின்னர் தீப்பெட்டி ஒன்றை எடுத்து, வாகனங்களுக்கு தீ வைக்க தொடங்கினார். முதலில் இரு சக்கர வாகனம் ஒன்றின் எரிபொருள் பைப்பை திறந்து, அதற்கு தீ வைத்தார். இதனால் அந்த இரு சக்கர வாகனம் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

சற்று நேரத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ மளமளவென பரவியது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, 14 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 கார்கள் என மொத்தம் 18 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

இதில், 8 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்கள் என மொத்தம் 10 வாகனங்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின. எஞ்சிய 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 கார்கள் என மொத்தம் 8 வாகனங்கள் சற்றே பாதிப்படைந்தன.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

சரியாக அதிகாலை 3.05 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

ஆனால் வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் யார்? என்ற தகவல் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் அவர் வாகனங்களுக்கு தீ வைத்த காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சுற்று வட்டார பகுதிகளில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

மிக சரியாக தீபாவளி சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்றால் பட்டாசுகளை கொளுத்துவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இங்கே ஒருவர், வாகனங்களை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அந்த ஆத்திரத்தில் பட்டாசுகளுக்கு பதிலாக, இந்த வாலிபர் வாகனங்களை தீ வைத்து கொளுத்தி விட்டாரோ என்னவோ!!!

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபரை பிடிக்க தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் செய்தது கொடூரமான குற்றம். அதற்கான தண்டனை அவருக்கு நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம்.

பட்டாசு பழைய ஸ்டைல்... தீபாவளிக்கு 18 வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்... வைரல் வீடியோ...

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே, தீபாவளி கொண்டாட்டங்களின்போது, 3 வயதே நிரம்பிய சிறுமியின் வாயில், சிறுவன் ஒருவன் பட்டாசுகளை வைத்து வெடித்தான். இதனால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார். அந்த சிறுமிக்கு 50 தையல்கள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

கடந்த சில நாட்களுக்கு முன்புசென்னையை சேர்ந்த ஒருவர் வாங்கிய புதிய பைக்கில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் பைக் வாங்கிய ஷோரூம் முன்பே எரித்தார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இது குறித்து நியூஸ் 7 வெளியிட்ட செய்தியின் படி சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள எஸ்பிஎம் டிவிஎஸ் என்ற டிவிஎஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் டிவிஎஸ் விக்டர் பைக்கை வாங்கியுள்ளார்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இவர் வாங்கிய நாள் முதல் பைக்கில் பிரேக் பிடிக்காமல் போவது, இன்டிகேட்டர் சரியாக வேலை செய்யாமல் போவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இதையடுத்து அவர் அந்த பைக்கை அந்த டீலரிடமே கொண்டு சென்று பிரச்னைகள் குறித்து கூறியுள்ளார். அவர்களும் அதை சரி செய்வதாக கூறி பைக்கை சரி செய்து கொடுத்துள்ளனர்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

ஆனால் அவருக்கு மீண்டும் அந்த பிரச்னை சில தினங்களில் வந்து விடுகிறது. சர்வீஸ் சென்டரில் அந்த பிரச்னையை என்னதான் சரி செய்து கொடுத்தாலும் அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவேயில்லை.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

கடந்த 6 மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை அவர் சர்வீஸ் சென்டருக்கு பைக்கை கொண்டு செல்லும் நிலை வந்தது. ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. இதற்கிடையில் அவர் சர்வீஸ் சென்டருக்கு செல்லும் போது எல்லாம் அங்கிருப்பவர்கள் அவரை கிண்டல் செய்யும் தொனியிலேயே நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இந்நிலையில் நேற்று ஒரு முடிவுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சர்வீஸ் சென்டருக்கு அவர் சென்றுள்ளார். அப்பொழுதும் அவரை வழக்கம் போல் அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது பைக்கை ஷோரூமிற்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஒரு பெரிய கல்லை கொண்டு அந்த பைக்கை தாக்க ஆரம்பித்தார்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

அதன் பின்னும் வேகம் அடங்காமல் தனது பைக்கில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து அதை அந்த பைக்கிலேயே ஊற்றி நெருப்பை ஊற்றி பற்ற வைத்து விட்டார்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது. சுற்றி இருந்த பொதுமக்கள் எல்லாம் அப்பகுதியில் கூடினர். இதை கண்ட டிவிஎஸ் ஷோரூம் காரர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

அதற்குள் அந்த பைக் முழுவதும் தீயில் கருகியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பைக்கை கல்லால் உடைக்க முயற்சிப்பதையும், தீ வைப்பதையும் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவுடன் வெளியான செய்தியை கீழே காணுங்கள்.

தமிழகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. சில நேரங்களில் தயாரிப்பு ஆலைகளில செய்யப்படும் சில பிழைகளால் சில வாகனங்களில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறான வாகனங்களை உடனடியாக மாற்றிக்கொடுக்க வேண்டியது டீலர்களது பொறுப்பு. பைக் தயாரிப்பு நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

ஒரு வேலை கோபி இந்த முறையும் பொறுமையாக பைக்க எடுத்து சென்று போயிருந்தால், போய் கொண்டிருக்கும் போதே பிரேக் பிடிக்காமல் போய் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதனால் இது போன்ற சம்பவங்களில் சர்வீஸ் சென்டர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

பழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..!

மேலும் கோபியின் கோபத்திற்கு முக்கிய காரணமே சர்வீஸ் சென்டர் அல்லது ஷோரூமில் இருந்தவர்களின் நடத்தைதான் என அவரே தெளிவாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் டீலர்கள் வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கும் வரை ஒரு விதமாகவும், வாகனம் வாங்கிய பின்பு வேறு ஒரு விதமாகவும் நடந்து கொள்கின்றனர். இது அந்த டீலருக்கு மட்டும் அல்லது டிவிஎஸ் நிறுவனத்திற்கே கெட்ட பெயரை சம்பாதித்து கொடுத்து விடும்.

More from DriveSpark

டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, November 9, 2018, 15:24 [IST]
English summary
Youngster Burnt 14 Two-wheelers, 4 Cars Instead of Crackers This Diwali. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+