26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் முதன்மையான மாடல்களில் ஒன்று இக்னிஸ் (Maruti Suzuki Ignis). இது ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி இக்னிஸ் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இதன்பின் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இக்னிஸ் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) டீலர்ஷிப்கள் மூலம் இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் மலிவான விலை காராக இக்னிஸ் திகழ்கிறது. ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும், இக்னிஸ் கிடைத்தது. அத்துடன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும், ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இதன்மூலம் பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும், ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்ட மாருதி சுஸுகியின் முதல் கார் என்ற பெருமையை இக்னிஸ் பெற்றது. ஆனால் பின்னாளில், இக்னிஸ் காரின் டீசல் வேரியண்ட்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

டீசல் வேரியண்ட்களின் பிரபலம் மங்கியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. முன்னதாக வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒட்டுமொத்தமாக அனைத்து டீசல் கார்களின் உற்பத்தியையும் நிறுத்த உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இதனிடையே டீசல் வேரியண்ட்களை விலக்கி விட்டாலும் கூட, இக்னிஸ் காரின் விற்பனை வலுவாகதான் இருந்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,500 இக்னிஸ் கார்களை விற்பனை செய்து வருவதே அதற்கு சாட்சி.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

கடந்த மாதம் கூட 3,156 இக்னிஸ் கார்களை மாருதி சுஸுகி மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. இக்னிஸ் காரின் 'லுக்', சாலையில் நிச்சயமாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். தற்போதைய நிலையில், 1.2 லிட்டர், கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே இக்னிஸ் கார் கிடைக்கிறது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இந்த 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 6,000 ஆர்பிஎம்மில் 82 பிஎச்பி பவரையும், 4,200 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இதில் வாடிக்கையாளர்கள் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

மாருதி சுஸுகி இக்னிஸ் கார் தற்போது 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட்டான சிக்மாவின் விலை 5.4 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் எண்ட் ஆல்பா ஏஜிஎஸ் வேரியண்ட்டின் விலை 7.14 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

பேஸ் சிக்மா வேரியண்ட் தவிர, இக்னிஸின் எஞ்சிய அனைத்து வேரியண்ட்களிலும் ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களில் இக்னிஸ் கார் கிடைக்கிறது. இதில், 3 ட்யூயல் டோன் ஆப்ஷன்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இக்னிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட் சிஸ்டம், கோ-டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு வார்னிங், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் இபிடி உடனான ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

இந்த சூழலில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை மாருதி சுஸுகி இக்னிஸ் தற்போது எட்டியுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 26 மாதங்களில், இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது மாதத்திற்கு சராசரியாக 3,850 இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

26 மாதங்களில் அடித்து தூள் கிளப்பிய மாருதி சுஸுகி... இந்தியாவில் எட்டிய புதிய மைல்கல் இதுதான்...

தற்போது பிஎஸ்-4 தர நிலைக்கு இணையான இன்ஜின்தான் இக்னிஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜின் வெகு விரைவில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்படவுள்ளது. முன்னதாக ஆல்டோ மற்றும் பலேனோ கார்களை, பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
1 Lakh Units Sold: Maruti Suzuki Ignis Achieves New Milestone. Read in Tamil
Story first published: Wednesday, May 1, 2019, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X