சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 184 கார்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவத்தின் பகீர் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

செல்போன் ஆப் (Cell Phone App) மூலம் இயங்கும் கேப் (Cab) நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும் காலம் இது. ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) போன்ற நிறுவனங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகின்றன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

ஓரளவிற்கு குறைவான கட்டணம், நின்று கொண்டிருக்கும் இடத்திற்கே நல்ல வசதிகளுடன் கூடிய கார் வந்து விடும் என்பது போன்ற காரணங்களால், கேப்களில் பயணம் செய்ய மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பாரம்பரியமான ஆட்டோ தொழிலே திண்டாடி வருகிறது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் இஷ்டம் போல் வசூலிக்கும் வரம்பு மீறிய கட்டணமும், கேப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டது என்பதே உண்மை. கேப் சர்வீஸ் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதன் காரணமாக, பல நிறுவனங்கள் வரிசையாக கால் பதித்து வருகின்றன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

ஆனால் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் கோலோச்சி கொண்டிருப்பதால், ஒரு சிலரால் இந்த தொழிலில் தாக்குபிடிக்க முடியாமல் போய் விடுகிறது. இந்த சூழலில் மிகவும் போட்டி நிறைந்த கேப் சர்வீஸ் தொழிலில், தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு களமிறங்கியது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

தமிழக தலைநகர் சென்னையில் கால் பதித்த இந்த தனியார் நிறுவனம், 300க்கும் மேற்பட்ட கார்களுடன் தனது தொழிலை தொடங்கியது. ஆனால் ஓலா, உபேர் போல் அல்லாமல், தொழிலில் தனக்கென தனித்துவமான ஸ்டைலை இந்நிறுவனம் பின்பற்றியது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

ஓலா, உபேர் நிறுவனங்கள் இயங்கும் விதம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, கார்களை குத்தகை அடிப்படையில், டிரைவர்களுக்கு வழங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தொழில் வேகம் எடுக்கவில்லை.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

எனவே 200க்கும் மேற்பட்ட கார்களை அந்நிறுவனம் தொழிலில் இருந்து விலக்கியது. அத்துடன் அவற்றை சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த இடத்தில், 200க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கார்கள் இங்கேதான் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில், கடந்த 24ம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

இங்கு கார்கள் பற்றி எரியும் தகவல் மதியம் 2 மணியளவில் தெரியவந்தது. உடனடியாக 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

சுமார் இரண்டே கால் மணி நேர போராட்டத்திற்கு பின், அதாவது 4.15 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக மொத்தம் 184 கார்கள் தீயில் எரிந்து நாசமாயிருந்தன. இந்த பயங்கர தீ விபத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

அருகே உள்ள குப்பை கிடங்கில் பற்றிய தீ, கார்களுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் சிலர் மது அருந்தி விட்டு, அணைக்காமல் வீசிய சிகரெட் துண்டு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் எனவும் தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

என்றாலும் தற்போது வரை உறுதியான காரணம் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தொழில் நஷ்டம் என்பதால், இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக கார்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

தற்போது தீயில் எரிந்து நாசமான கார்களுக்கு, 'இன்சூரன்ஸ் க்ளைம்' செய்யும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. தீ விபத்தில் நாசமான பெரும்பாலான கார்கள், Comprehensive Insurance Coverage எனப்படும் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

ஆனால் ஒரு சில கார்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் இல்லை. அவை புதுப்பிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை தரவுகளின்படி பார்த்தால், சில கார்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதமே இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

அதே சமயம் இன்னும் சில கார்களுக்கு அதற்கு முன்னதாகவே இன்சூரன்ஸ் காலாவதியாகியுள்ளது. எனினும் ஏற்கனவே குறிப்பிட்டபடி தீயில் எரிந்து நாசமான பெரும்பாலான கார்கள், விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ்தான் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

எனவே இன்சூரன்ஸ் க்ளைம் மூலம் ஒவ்வொரு காருக்கும் குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாயை இழப்பீடாக பெற அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்காக, வழக்கறிஞர்கள் மற்றும் இன்சூரன்ஸ் துறையை சார்ந்த நிபுணர்களுடன் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது கடந்த 23ம் தேதி (சனிக்கிழமை) கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், சுமார் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில், ஏரோ இந்தியா-2019 என்ற ஏர் ஷோ மற்றும் விமான கண்காட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

சென்னையில் 200 கார்கள் தீயில் நாசமானதன் பகீர் பின்னணி... கிடைக்கப்போகும் இன்சூரன்ஸ் தொகை இதுதான்...

இதற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இந்த தீ விபத்திற்கு என்ன காரணம்? என்பதை பாதுகாப்பு துறை உறுதி செய்துள்ளது. அதிகப்படியான சைலென்சர் உஷ்ணம் காரணமாக முதலில் ஒரு கார் தீப்பிடித்துள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்ற கார்களுக்கும் தீ பரவியுள்ளது.

Most Read Articles
English summary
184 Cars Destroyed In Chennai Fire Accident: Here Is The Reason. Read in Tamil
Story first published: Tuesday, February 26, 2019, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X