2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த கார் அதிகளவில் விற்பனையாச்சுனு தெரிஞ்சுக்கனுமா, அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

2018 ஆம் ஆண்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிக ஆச்சரியமான வருடமாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஜிஎஸ்டி வரி உயர்வு, பண மதிப்பிழப்பு, பாலிசி மாற்றங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கடந்து கார்கள் அமோக விற்பனையாகியுள்ளன.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கடந்த ஆண்டில் மட்டும் 33 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 5 சதவிகித வளர்ச்சியாகும். மேலும், இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களே அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதில், டாப் டென் விற்பனையான கார்களில் மாருதி சுஸுகியின் தயாரிப்புகள் ஏழு இடங்களைப் பிடித்துள்ளன. தொடர்ந்து, மாருதி சுஸுகி அதன் ஆதிக்கத்தை தக்க வைத்துள்ளது. இது கடந்தாண்டைக் காட்டிலும் 8 சதவிகித அதிமாக விற்பனையாகும்.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

வழக்கமாக அதிகளவில் ஆல்டோ கார் தான் விற்பனையாகும். ஆனால், கடந்தாண்டில் அதனை வீழ்த்திய டிசையர் மாடல் உச்சகட்டமாக 2 லட்சத்து 64 ஆயிரத்து 612 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது மாதத்திற்கு 22 ஆயிரம் கார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மாருதி டிசையர் புது பொலிவுடன் பெட்ரோல், டீசல் எஞ்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன் உடன் வெளிவந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதைத்தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் மூன்று இடங்களையும் பிடித்து, தனது மார்கெட்டை தக்க வைத்துள்ளது. ஹூண்டாயின் ஐ20 எப்போதும் போலவே அதன் மற்ற மாடல்களைக் காட்டிலும் அதிகளவில் விற்பனையாகி ஏழாவது இடத்தில் உள்ளது.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் புது பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐ20, ஹேட்ச்பாக் பிரிவில் ஹுண்டாயின் அடையாளமாக இருந்து வருகிறது. இது மாதம் 10 ஆயிரம் கார்கள் என விற்பனையாகியுள்ளது.

2018ல் அதிகம் விற்பனையான கார்கள்: எவ்வளவு விற்பனையாச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும், கடந்த ஆண்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையைப் புள்ளி விவரங்களுடன் காணலாம். அதன் பட்டியல்:

Top 10 Most Sold Cars In 2018 In India No. of Units Sold
Maruti Suzuki Dzire 2,64,612
Maruti Suzuki Alto 2,56,661
Maruti Suzuki Swift 2,23,630
Maruti Suzuki Baleno 2,10,236
Maruti Suzuki Vitara Brezza 1,55,466
Maruti Suzuki Wagon R 1,52,020
Hyundai Elite i20 1,41,104
Hyundai Grand i10 1,34,249
Hyundai Creta 1,20,905
Maruti Suzuki Celerio 1,00,957
Most Read Articles
English summary
2018 Highest Selling Cars In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X