புதிய தலைமுறை அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் வெளியீடு!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய தலைமுறை 1 சீரிஸ் சொகுசு கார் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக 1 சீரிஸ் சொகுசு கார் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள், வடிவமைப்பு மாற்றங்களுடன் மூன்றாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கார் 4,319 மிமீ நீளமும், 1,799 மிமீ அகலமும், 1,434 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,610 மிமீ ஆக உள்ளது. தற்போதைய மாடலைவிட நீளத்தில் 5 மிமீ, வீல் பேஸில் 20 மிமீ வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அகலம் 34 மிமீ வரையிலும், உயரம் 13 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் சிறுநீரக வடிவ க்ரில் அமைப்புடன் இரட்டை வண்ண பம்பர் அமைப்பு, சி வடிவிலான பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பு, படுக்கை வாட்டிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

உட்புறத்தில் இடவசதி மேம்பட்டுள்ளது. பின் இருக்கையில் ஹெட்ரூம் 13 மிமீ வரையிலும், கால் வைப்பதற்கான லெக் ரூம் பகுதி 33 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பூட்ரூம் இடவசதி 280 லிட்டர் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. எலெக்ட்ரிக் டெயில் கேட் ஓபன், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இந்த காரில் 3 டீசல் எஞ்சின் 2 பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் சர்வதேச அளவில் வழங்கப்படும். இந்த எஞ்சின்கள் 114 பிஎச்பி முதல் 302 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். எம் 135ஐ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். 250 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

ஆட்டோமேட்டிக் பார்க்கிங் அசிஸ்ட், டிஜிட்டல் கீ, பெடஸ்டரியன் கொலிஷன் வார்னிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் சிஸடம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

வரும் செப்டம்பர் 28ந் தேதி இந்த கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








