கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

கோவா வின்டேஜ் கார் மற்றும் பைக் திருவிழா, வரும் ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஒருபக்கம் இந்த திருவிழாவின் மூன்றாவது எடிசனை நடத்த கோவா தயாராகி வரும் நிலையில், மறுபக்கம் அதன் அழகிய சாலைகளில் உலா வர 75க்கும் மேற்பட்ட வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் தயாராகி கொண்டுள்ளன.

கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் மீதான ஈர்ப்பு என்றும் அழியாது. இன்றைய மாடர்ன் யுகத்திலும் கூட மக்களை திரும்பி பார்க்க வைக்கும் சக்தி வின்டேஜ் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு உள்ளது. வாகனங்களை சேகரித்து பொக்கிஷமாக பாதுகாப்பவர்கள் மத்தியில் வின்டேஜ் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான கிராக்கி அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வின்டேஜ் வாகனங்களை வைத்திருப்பவர்கள் யாருக்கும் அவற்றை விற்பனை செய்வதில்லை. அத்துடன் தங்களால் இயன்ற வரை அவற்றை பராமரித்து நல்ல நிலையில் வைத்து கொள்கின்றனர்.

கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

வின்டேஜ் வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அரிதாகதான் பயன்படுத்துகின்றனர். எனவே அவற்றை சாலைகளில் காண்பதும் அரிதாகதான் உள்ளது. வின்டேஜ் வாகனங்களை வைத்திருப்பவர்கள் குழுவாக இணைந்து எங்கேயாவது வெளியில் வந்தால்தான் உண்டு. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை என்ற ரீதியில் அவ்வப்போது நடத்தப்படும் வின்டேஜ் திருவிழாக்கள் இத்தகைய வாகனங்களை ஒன்றிணைக்கின்றன.

கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

கோவா வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் திருவிழாவும் அதில் ஒன்று. பொக்கிஷம் போன்ற வாகனங்களை அதிக எண்ணிக்கையில் ஒன்றிணைக்கும் பணியை செவ்வனே செய்து வருகிறது கோவா வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் திருவிழா. இந்த சூழலில் மூன்றாவது எடிசன் கோவா வின்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் திருவிழா வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில், கோவா, பெங்களூர், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் வின்டேஜ் வாகனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. இதில் பங்கு பெற விரும்பினால், [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு மெயில் செய்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 9371677604/9850077993 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைக்கலாம். டூவீலரை செக்ஸனை பொறுத்தவரை ஒரே ஒரு கேட்டகரி மட்டுமே உள்ளது. இதன்படி 1988ம் ஆண்டுக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

கோவாவில் களைகட்ட போகும் வின்டேஜ் கார், பைக் திருவிழா! எப்போது என தெரியுமா?

ஆனால் கார்களை பொறுத்தவரை வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள், மாடர்ன் கிளாசிக்ஸ் மற்றும் ப்யூச்சர் கிளாசிக்ஸ் (Future Classics) என மூன்று கேட்டகரிகள் உள்ளன. 1988ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்பவர்கள் முதல் கேட்டகரியிலும், 1994 வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்பவர்கள் இரண்டாவது கேட்டகரியிலும், 1994-1998க்கு இடைப்பட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்பவர்கள் மூன்றாவது கேட்டகரியிலும் பங்கேற்கலாம்.

Image Source: Goavintage

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2019, 15:38 [IST]
English summary
Goa To Host Third Edition Of Vintage Cars & Bikes Festival On April 14. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+