க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

ஹூண்டாய் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் க்ரெட்டா மாடலில் புத்தம் புதிய இஎக்ஸ் 2019 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், சொகுசு கார்களுக்கு இணையான பட்ஜெட் ரக க்ரெட்டா எஸ்யூவி மாடல் காரை கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய மாடலாக அதனை அறிமுகம் செய்தது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

பட்ஜெட் ரகத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருந்ததால், இந்தியர்கள் மத்தியில் இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், இந்த காருக்கு போட்டியாக பல்வேறு கார்கள் சந்தையில் களமிறக்கப்படுகின்றன. ஆனால், அவை க்ரெட்டாவுக்கு டஃப் கொடுக்க முடியாமல் களத்தைவிட்டு, வந்த வேகத்திலேயே வெளியேறின. இதற்கு சான்றாக க்ரெட்டாவின் மாதாந்திர விற்பனை உள்ளது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மடால்களில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அடுத்தபடியாக ஹூண்டாயின் க்ரெட்டாதான் இருந்து வருகிறது. இந்த நிலையில், க்ரெட்டாவின் இபிளஸ் மாடலை ரிபிளேஸ் செய்யும் விதமாக க்ரெட்டா இஎக்ஸ் 2019 மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா லைன் அப்பில் இ, இபிளஸ், எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் [டுயூவல் டோன்] மற்றும் எஸ்எக்ஸ் [ஓ] ஆகிய 6 வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. இந்த கார்கள் 7 வண்ணங்களிலும், இரண்டு இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கின்றன.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

இந்நிலையில் தான், இ+ காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக இஎக்ஸ் மாடலை ஹூண்டாய் நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்த காரின் முகப்பு பக்கத்தில் பகல்நேர பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், காரின் பின் இருக்கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளும் வகையில் ஆர்ம் ரெஸ்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதேப்போன்று, பின் இருக்கையில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்டும் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின்போது, பின் இருக்கையில் அமர்ந்து வரும் பயணிகள் சொகுசான அனுபவத்தை பெரும் வகையில் இது இடம்பெற்றுள்ளது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, இந்த காரில் பார்க்கிங் கேமிரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் 5.0 இன்ச் டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்டியரிங் வீலிலும் ஆடியோ சிஸ்டத்தை கன்ட்ரோல் செய்யும் லிவர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சமாக டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

இந்த புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா இஎக்ஸ் காரானது, இரண்டு டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும், ஒரு பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. அவ்வாறு 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் காரில் 90 பிஎஸ் மற்றும் அதிகபட்சமாக 224 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டும் பெற்றுள்ளது.

க்ரெட்டா இபிளஸ் காருக்கு மாற்றாக இஎக்ஸ் காரை களமிறக்கும் ஹூண்டாய்: எதற்கு தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, இதைவிட அதிக விலைக் கொண்டதாக இருக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜினானது 128 பிஎஸ் பவரையும் 265 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் ஆப்ஷனில், 1.6 லிட்டரில் 123 பிஎஸ் பவர் மற்றும் 154 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்மிஸ்ஸன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2019, 18:30 [IST]
English summary
2019 Hyundai Creta EX Variant To Launch Soon. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+