2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.

புதுப்பொலிவுடன் வரும் மாருதி பலேனோ காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்திலும், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

வெளிப்புறத்தில் சிறிய டிசைன் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் மாருதி பலேனோ கார் வர இருக்கிறது. இந்த நிலையில், புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாருதி பலேனோ காருக்கு டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

ரூ.11,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. வரும் 27ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த புதிய மாடலின் அறிமுக தேதி குறித்து இதுவரை தகவல் இல்லை.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

புதிய மாருதி பலேனோ காரில் முகப்பில் முக்கிய மாற்றங்க்ளாக புதிய க்ரில் அமைப்பும், பம்பரும் இடம்பெற்றுள்ளது. டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

புதிய மாருதி பலேனோ காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், வைப்பர்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி பனி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

உயர்தர ஃபேப்ரிக் இருக்கைகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மர அலங்கார தகடுகளுடன் கூடிய பிரிமீயம் டேஷ்போர்டு அமைப்பு உள்ளிட்டவையும் புதிய மாருதி பலேனோ காரின் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக இருக்கும்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

புதிய மாருதி பலேனோ காரின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் தக்கவைக்கப்படும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்சபி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலும் புதுப்பொலிவுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும்.

2019 மாருதி சுஸுகி பலேனோ காருக்கு முன்பதிவு துவக்கம்!

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார் மாடல்களுடன் போட்டி போடும். வரும் பிப்ரவரி மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Tuesday, January 15, 2019, 12:24 [IST]
English summary
2019 Maruti Baleno Facelift Bookings open.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+