2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய மாருதி பலேனோ கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு பெயர்களில் எஞ்சின

புதுப்பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய மாருதி பலேனோ கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு பெயர்களில் எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வை பொறுத்து 11 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முன்புறத்தில் புதிய முப்பரிமாண க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் பெரிய அளவிலான பனி விளக்குகள் அறை ஆகியவற்றுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. பகல்நேர விளக்குகளு"ன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மாருதி பலேனோ காரில் நீல வண்ண அலங்கார பாகங்களுடன் கூடிய கருப்பு வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றுள்ளது. இது காரின் இன்டீரியரை மிக பிரிமீயமாக காட்டுகிறது. அதேபோன்று, இருக்கைகளும் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் கவர்ச்சியாக இருக்கிறது.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரில் இடம்பெற்றிருக்கும் அதே 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது புதிய மாருதி பலேனோ காரிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது முக்கிய அம்சமாக இருக்கிறது.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மாருதி பலேனோ காரில் முன் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரீமைண்டர், அதிவேகம் குறித்த எச்சரிக்கைவசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ப்ரீ டென்ஷனர் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர் வசதியுடன் சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்டுகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக உள்ளன.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மாருதி பலேனோ காரில் 82 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்துள்ளது. இரண்டு எஞ்சின்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மாருதி பலேனோ காரின் பேஸ் வேரியண்ட் ரூ.5.45 லட்சத்திலிருந்து ரூ.8.77 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு நெருக்கடியை தரும்.

2019 மாருதி பலேனோ கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

விலை விபரம்

Variant Petrol Diesel
Sigma Rs 5.45 lakh Rs 6.60 lakh
Delta Rs 6.16 lakh Rs 7.31 lakh
Zeta Rs 6.84 lakh Rs 7.99 lakh
Alpha Rs 7.45 lakh Rs 8.60 lakh
Sigma CVT Rs 7.48 lakh N.A.
Zeta CVT Rs 8.16 lakh N.A.
Alpha CVT Rs 8.77 lakh N.A.

More from DriveSpark

Article Published On: Monday, January 28, 2019, 13:30 [IST]
English summary
2019 Maruti Suzuki Baleno facelift launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+