2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு புதிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சமீபத்தில் விற்பனைக்கு வெளியானது. இதன் பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

இந்திய மக்களுக்கு மிகவும் பரீட்சையமான மாருதி சுஸுகி நிறுவனம் மக்களின் தேவையை அறிந்து பட்ஜெட் விலையில் வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இதனடிப்படையில் சமீபத்தில் வேகன் ஆர் காரினை அப்கிரேட் செய்து அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

புதிய வேகன்ஆர் கார் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றன. அதில், 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலானது எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஎம்டி ஆகிய மூன்று வேரியண்ட்களிலும்., 1.2 லிட்டர் பெட்ரோல் மாடலானது விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஎம்டி, இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி ஆகிய நான்கு வேரியண்ட்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனம் 2019 வேகன்ஆர் மாடலில் சிறந்த ஸ்டைலான வடிவமைப்பையும், முந்தைய மாடலைக் காட்டிலும் மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களையும் இதில் இணைத்துள்ளது.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

அதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த 2019 வேகன்ஆர் மாடலை ரோபஸ்ட், பிளே டைம் மற்றும் காசா ஆகிய மூன்று பேக்கேஜ் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

ரோபஸ்ட் பேக்கேஜ்:

ரோபஸ்ட் பேக்கேஜில், முன்புறம் மற்றும் பின்புறத்தில் நீட்டிக்கப்பட்ட டுயூவல்-டோனில் கிடைக்கின்றன. மேலும், அண்டர்பாடி ஸ்பாய்லர், கருப்பு வீல் ஆர்ச் கிளாடிங் மற்றும் மோல்ட் செய்யப்பட்ட பாடி என அட்டகாசமான வெளிப்புறத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கார்னிஷ் ஃபினிஷ் செய்யப்பட்ட டோர் விஷர்ஸ் மற்றும் முன்பக்க கிரிள் இதற்கு முக்கிய அம்சமாகும்.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

உள்பக்க பாடியானது துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இன்டீரியர் டிசைனானது, பார்வையாளர்களை கவரும் வகையில் மிகவும் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. தொடரந்து, காரின் இறுக்கைகள் சில்வர் பிரிஸ்ம் மற்றும் விக்டரி லைனிங் கொண்டு கவர் செய்யப்பட்டுள்ளது.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

பிளே டைம் பேக்கேஜ்:

பிளே டைம் பேக்கேஜானது ஒரு பெரிய புதிய வேகன்ஆர் காரினை ஃபங்கி ஸ்டைலில் வழங்குகிறது. இந்த கார் ஆரஞ்சு வர்ண பூச்சால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழகுபடுத்தப்பட்ட முன்பக்க பக்க பம்பர், மேல் பக்க கிரில், மூடுபனி விளக்கு அழகுபடுத்தல், பினபக்க எல்இடி சிவப்பு விளக்கு ஆகியவை சிறப்பம்சமாக உள்ளன.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

மேலும், ரோபோஸ்ட் பேக்கேஜ் போன்று, பிளே டைம் மாடலிலும் இண்டிரீயர் டிசைனானது சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

காசா பேக்கேஜ்:

காசா பேக்கேஜில் முன் மற்றும் பின்புற பம்பர்கள் அழுகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன், கதவுகள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தோற்றிவிக்கப்பட்டுள்ளன. மேலும், உள்பக்கத்தில் சிறந்த கார்பெட் மேட்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஸ்டன் செர்ரி ஸ்டைலிங் கிட், டையமண்ட் கிராஸ் பினிஸ் என பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பு.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

இந்த புதிய வேகன்ஆரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஓட்டுநருக்கான ஏர்பேக், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.

2019 மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்கள்: முழு விபரம்!

பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த வேகன்ஆர் கார், ரூ. 4.19 லட்சத்திலிருந்து ரூ. 5.69 லட்சம் வரை வேரியண்டகளுக்கு ஏற்பவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 30, 2019, 16:56 [IST]
English summary
2019 Maruti Suzuki Wagonr Facility And Full Details. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+