புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே கார் சாலை சோதனைகளில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி வேகன் ஆர் காருக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நீண்ட காலமாக மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற சிறந்த பட்ஜெட் கார் மாடலாகவும் விளங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் புதிய தலைமுறை வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் பிரிமீயம் மாடலான ஸ்டிங்ரே மாடலையும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே மாடலானது தற்போது தீவிர சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் இருக்கும் புதிய ஸ்டிங்ரே மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில், வேகன் ஆர் ஸ்டிங்ரே காரில் 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருப்பது தெரிகிறது.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

அதேபோன்று, முன்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் பார்க்கிங் கேமராவும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

திய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும, 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினாக இருக்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே கார் மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, சாதாரண வேகன் ஆர் மாடலைவிட விலையும் அதிகம் இருக்கும் என்பதுடன், அதிக பிரிமீயம் வசதிகளையும் பெற்றிருக்கும்.

Spy Image source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2019, 13:15 [IST]
English summary
The 2019 Maruti Suzuki WagonR Stingray has been spotted testing in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+