மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

மலிவு விலையில் விற்பனைக்கு களமிறங்கியுள்ள ஹூண்டாய் வெனியூ காருக்கு போட்டியாக, மாருதி சுஸுகி நிறுவனம் அதன் விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை அப்டேட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கார் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக ப்ரெஸ்ஸா எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த கார் மலிவு விலையில் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதே, இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறக் காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா கார் ஒவ்வொரு மாதமும் சுமார் 15 ஆயிரம் யூனிட்களையாவது விற்றுவிடும்.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

ஆனால், அண்மைக் காலங்களாக வாகன நிறுவனங்கள் சந்தித்து வரும், விற்பனை சரிவை மாருதி சுஸுகி நிறுவனமும் சந்தித்துள்ளது. இதன்காரணமாக, கடந்த மாதங்களில் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மாடலின் விற்பனைக் கணிசமாக குறைந்தது. ஆகையால், அது கடந்த மாதங்களில் 12 ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்றன. அதுவும் கடந்த மே மாதத்தில் பார்த்தேமேயானால், கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

அந்தவகையில், கடந்த மே மாதத்தில் 44 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா மாடல் சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 8,781 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்னதாக இதேபோன்ற வீழ்ச்சியை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த நிறுவனம் சந்தித்திருந்தது. தற்போதைய மிக மோசமான விற்பனை வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

இருப்பினும், முக்கிய காரணமாக ஹூண்டாய் வெனியூவின் வருகையே இருக்கின்றது. இந்த கார் மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா மாடலைக் காட்டிலும் ஒரு லட்சம் குறைவான விலையைப் பெற்றிருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்த காரில் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, ஹூண்டாய் வெனியூவில் ஸ்மார்ட் கனெக்ட் தொழில்நுட்பம், இ-சிம் அம்சம், சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

ஆகையால், மலிவு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை இருக்கின்ற காரணத்தால், இந்த காரின் விற்பனை அதீத வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றது. அதேசமயம், மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா போன்ற கார்கள் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. அதற்கேற்ப வகையில், ஹூண்டாய் வெனியூ அறிமுகமான அதே மாதத்தில், ப்ரெஸ்ஸா மாடல் வெறும் 7 ஆயிரம் யூனிட்களை மட்டுமே விற்பனைச் செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

இந்த மிக மோசமான விற்பனை வீழ்ச்சி, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்ததது. ஆகையால், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் வகையில், ப்ரெஸ்ஸா மாடலில் சில அப்டேட்டுகளை செய்ய முடிவு அந்த நிறுவனம் முடிவு செய்தது. அந்தவகையில், புதிய 2019 ப்ரெஸ்ஸா மாடலில் கூடுதல் வசதியாக சன்ரூஃப் மற்றும் பக்கவாட்டு பகுதியில் ஏர் போக் உள்ளிட்டவற்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

இந்த தரமான நடவடிக்கையால், மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா மாடல், அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் பாதுகாப்பிலும் சொகுசிலும் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்த மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை. அதேபோன்று, இந்த புதிய ப்ரெஸ்ஸாவின் விற்பனை தேதி உள்ளிட்ட மற்ற தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் தயாரிப்புகளை வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலாக இருக்கின்ற ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்பவாறு அப்டேட் செய்து வருகின்றது. இதற்காக, அது தாயாரித்து வரும் அனைத்து கார்களிலும் வாகன ஓட்டி ஏர் பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீட் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளைக் கூடுதலாக இணைத்து வருகின்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

பக்கவாட்டு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சத்தில் இடம்பெறவில்லை. பாதுகாப்பு விதியைப் பொருத்தவரை, வாகன ஓட்டி மற்றும் முன்பக்க பயணி ஆகிய இருவர்களின் பாதுகாப்பிற்கான ஏர் பேக்குகளை மட்டுமே வலியுறுத்துகின்றது. இருப்பினும், மாருதி சுஸுகி அதன் ப்ரெஸ்ஸா காரில், ஹை எண்ட் வேரியண்டுகளில் காணப்படும் பக்கவாட்டு ஏர் பேக்குகளை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

அதேபோன்று, புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 காரணமாக, அதன் டீசல் வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. ஆகையால், இது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருக்கின்று. மேலும், தற்போதைய மாற்றங்களுடன் புதிய கலர் மற்றும் காஸ்மெட்டிக் மாற்றத்தில் ப்ரெஸ்ஸா கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..!

விட்டாரா ப்ரெஸ்ஸா கார் தற்போது, 1.3 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, 4,000 ஆர்பிஎம்மில் 88.5 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த கார் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
2019 Maruti Suzuki Vitara Brezza With Sunroof and Four Airbags. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X