பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ: விலை மற்றும் முக்கிய தகவல் உள்ளே!

மினி நிறுவனம் அதன் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை மற்றும் முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

ஜெர்மனியைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ பிராண்ட் மட்டுமின்றி ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மினி ஆகிய பிராண்டுகளிலும் கார்களைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது. அந்த வகையில், இந்த நிறுவனம் மினி பிராண்டில் தயாரித்துள்ள ஜான் கூப்பர் ஒர்க்ஸ் என்னும் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஓவர்டிரைவ் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

ஹேட்ச்பேக் ரகத்திலான மினி கார்கள், டிசைன் மற்றும் ஸ்டைலில் அற்புதமாக காட்சியளிக்கின்றது. இதன்காரணமாகவே, இந்த பிராண்டின் கார்கள் உலகளவில் மிகவும் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது. அதிலும், சாதாரண மாடலைக்காட்டிலும், அதிகளவிலான கஸ்டமைஸ் அம்சங்களுடன், கூடுதல் சக்திவாய்ந்த எஞ்ஜினுடன் விற்பனையாகும் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் மாடலுக்கு ஒருபடி மேலே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கின்றனர்.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

இந்த சிறப்பான மாடலை, மினி நிறுவனம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதுப்பித்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட மாடலைத்தான் அந்த நிறுவனம் இன்று (மே 9) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மதிப்பு எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 43.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

மினி வரிசையில் உயர் ரகமாக இருக்கும், இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல், 3 கதவுகளைக் கொண்டதாக மட்டுமே கிடைக்கின்றது. இத்துடன், இந்த காரில் மெக்கானிக்கல் அப்டேட்டுகளாக புதிய பிஸ்டன்கள், டர்போ மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

மேலும், இந்த கார் பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிக்கு இணையான, யூரோ-6 மாசு உமிழ்வைப் பெற்று இந்தியாவில் களமிறங்கியுள்ளது. இத்துடன், இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் பவர்ட்ரெயின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 234 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இது பழைய மாடலைக்காட்டிலும் 24 பிஎஸ் பவர் அதிகமாகும். அதேபோன்று, 0 - 100 கிமீ வேகத்தை 6.1 விநாடிகளில் எட்டிவிடும்.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

இது தவிர, புதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரில் பெரிய அளவிலான 4 பிஸ்டன் ப்ரெம்போ பிரேக்குகள், 17 அங்குல ஜான் கூப்பர் ஒர்க்ஸ் இலகு எடையிலான அலாய் வீல்கள், ஹெட்லைட் மற்றும் பானட்டுகளில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரம், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

பிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ கார்!

இத்துடன், தொழில்நுட்ப அம்சங்களாக 8.8 இன்ச் கொண்ட சென்ட்ரல் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பில் கார் ப்ளே வசதியுடன் வழங்கப்பபட்டுள்ளது. மேலும், ஜேசிடபிள்யூ ஸ்போர்ட்ஸ் இருக்கை, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே மற்றும் பியானோ பிளாக் இன்டீரியர் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக இன்டீரியரில் சேர்க்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2019, 14:50 [IST]
English summary
2019 Mini John Cooper Works Launched In India — You Don’t Need A Big One To Be Happy. Read In Tamil.
மேலும்... #மினி #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+