மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் வருகிற 19ஆம் தேதி தனது புதிய தயாரிப்பு மாடலான 2020 அவ்ரா காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

முன்னதாக கடந்த மாதங்களில் பல சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 கார், க்ராண்ட் ஐ10 நியோஸின் முன்புறத்தை அப்படி கொண்டிருக்கவில்லை என்பது இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் வளைவான க்ரில், புதிய பம்பர் மற்றும் அப்டேட்டான ஹெட்லைட் அமைப்புகளை பொருத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்லேட் வடிவிலான க்ரிலுக்கு பதிலாக தேன்க்கூடு வடிவில் க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பல பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பது வெளியாகியுள்ள இந்த சோதனை ஓட்ட வீடியோவின் மூலம் தெரிய வருகிறது. அதேபோல் அலாய் சக்கரங்கள் காருக்கு ப்ரீமியம் ஹேட்ச்பேக் தோற்றத்தை கொடுக்கின்றன.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கார் ஹேட்ச்பேக் கார்களுக்கு உண்டான பின்புற கதவுகளை தான் கொண்டுள்ளது. அவ்ரா மாடலுக்கு மூன்று-பாக்ஸ் தோற்றம் தான் கொடுக்கப்படவுள்ளது.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

உட்புறத்தில் சிறப்பம்சமாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழியாக ஸ்மார்ட்போனை இணைக்கக்கூடிய 8.0 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த வேரியண்ட் மட்டும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் ஹப், ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூலிங்க் கனெக்டட் சூட் போன்றவற்றை பெறுகிறது.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

ஹூண்டாய் அவ்ரா அடுத்த ஆண்டில் பிஎஸ்6-க்கு இணக்கமான மூன்று என்ஜின் தேர்வுகளுடன் விற்பனையாகவுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டருக்கு மாற்றப்பட்ட டீசல் என்ஜின், வென்யூ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆகும். இதில் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வென்யூவை விட குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றுள்ள அவ்ரா மாடல் காம்பேக்ட் செடான் பிரிவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் இந்த புதிய அவ்ரா கார் மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டி மாடலாக விளங்கும். எக்ஸ்செண்ட் மாடலுக்கு மாற்றாக இந்த கார் சில வெளிநாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

Source: Lemon Green Studios/YouTube

Most Read Articles
English summary
2020 Hyundai Aura (Maruti Dzire Rival) Spotted Testing Ahead Of Public Debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X