நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்திற்கு க்ரெட்டா மாடல் மிக பெரிய விற்பனை வளர்ச்சியை கொடுத்தது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. 2015ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த மாடல் இந்தியாவில் மட்டும் 5 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்திருந்தது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

இந்நிலையில் முழு தொழிற்நுட்பங்களும் மாற்றப்பட்ட புதிய க்ரெட்டாவின் அடுத்த தலைமுறை மாடல் இந்தியாவில் 2020 பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாகவே சீனா மற்றும் சில தென் அமெரிக்க சந்தைகளில் அறிமுகமாகிவிட்ட இந்த எஸ்யூவி மாடலுக்கு ஹூண்டாய் நிறுவனம் ஐஎக்ஸ்25 என பெயரிட்டுள்ளது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த மாடலின் அடிப்படையில் தான் 2020ல் இந்தியாவில் வெளியாகும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இருக்குமாம். அதாவது க்ரெட்டாவின் இரண்டாம் தலை முறை காராக இந்தியாவில் இந்த கார் வர இருக்கிறது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

வெளிப்புற தோற்றம்

ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா), அதன் முந்தைய மாடலான க்ரெட்டாவை விட 30 மில்லிமீட்டர் நீளத்தில் அதிகமாக 4,300 மிமீ நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அகலத்திலும் க்ரெட்டாவை விட 10 மிமீ பெரியதாக 1,790 மிமீ-ல் இருந்தாலும் 1,630 மிமீ உயரம் கொண்ட அந்த மாடலை விட 8மிமீ குறைவாக 1,622 மிமீ உயரத்தை இந்த ஐஎக்ஸ்25 கொண்டுள்ளது. இந்த அளவெல்லாம் சீனாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐஎக்ஸ்ஸின் அளவாகும். இதுவே க்ரெட்டா எஸ்யூவியாக இந்த கார் நமது நாட்டில் அறிமுகமாகும்போது இன்னும் எல்லா அளவிலும் பெரியதாகவே இருக்கும்.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் கார்களை போலவே இருக்கும் இந்த ஐஎக்ஸ்25, ஹூண்டாய் க்ரெட்டாவை விட பெரியளவில் வட்ட வடிவிலான முன்பக்கத்தை கொண்டுள்ளது. மிக அழகாக கருப்பு நிறத்தில் இருக்கும் க்ரில் பகுதி, இந்திய மார்கெட்டில் தற்சமயம் பிரபலமாகி வரும் இரண்டாக பிளவுப்பட்ட ஹெட்லைட் அமைப்பு, அதற்கு மேலே பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்கு, ஹெட்லைட்டிற்கு கீழ்புறத்தில் L-வடிவில் இண்டிகேட்டர் லைட் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

பம்பர், நன்கு பளபளப்பாக்கப்பட்ட அலுமினிய உலோகத்தால் செய்யப்பட்டது போல் உள்ளது. இதன் இரு முனைகளிலும் தான் இண்டிகேட்டர் லைட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐஎக்ஸ்25-ன் சக்கரங்களில் சதுர வடிவிலான உலோக வேலைப்பாடுகள் நடந்துள்ளன. இத்தகைய சக்கரங்கள் ஏற்கனவே ஹூண்டாய் வென்யூவில் கொடுக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும்போது இன்னும் மெறுக்கேற்றப்பட்ட அலாய் அமைப்புகள் இருக்கும் என தெரிகிறது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

இக்காரின் பின்புறத்திலும் இரண்டாக பிளவுப்பட்ட விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கீழ்பாதி விளக்கில் ப்ரேக் லைட் மற்றும் டர்ன் சிக்னல் விளக்குகள் அடங்கியுள்ளன. இந்திய சாலைக்கென இந்த விளக்குகளில் இன்னும் டெஸ்ட்கள் செய்யப்படலாம். எப்படியிருந்தாலும் இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும்போது பின்புறத்திலும் சில வித்தியாசமான டிசைன்களை இந்த காரில் எதிர்ப்பார்க்கலாம்.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

உட்புற தோற்றம்

ஐஎக்ஸ்25-ன் உட்புற புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் எம்ஜி ஹெக்டாரில் கிடைமட்டமாக உள்ளதுபோல் இதில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டேஸ்ஸில் மிக குறைவான அளவிலேயே பொத்தான்கள் உள்ளன. ஏசி கண்ட்ரோல் உள்பட பல செயல்பாடுகள் அனைத்தும் தொடுத்திரை மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

மேலும் இந்த எஸ்யூவியில், க்ரூஸ் கண்ட்ரோல், சாய்வதற்கு ஏற்ற வகையில் ஸ்டேரிங்கை மாற்றும் வசதி, டயருக்கு உண்டாகும் அழுத்தத்தை கணக்கீடும் வசதி, எலக்ட்ரிக் பார்கிங் ப்ரேக், ஆடியோ சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்காக தாழ்ந்த ஸ்டேரிங் சக்கரம், மொபைல்களுக்கு வரும் அழைப்புகளை டேஸ் போர்டிலேயே ஏற்கும் வசதி போன்ற சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

வெளிப்புற தோற்றத்தை போல இக்காரானது இந்தியாவில் அறிமுகமாகும்போது உட்புற தோற்றத்திலும் சில மாறுதல்களுடன் தான் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் முதலில் ஐந்து இருக்கைகளை கொண்ட நியூ க்ரெட்டா தான் வெளியாகவுள்ளது. சில காலம் கழித்து தான் ஏழு இருக்கைகளை கொண்ட நியூ க்ரெட்டாவை வெளியிடும் திட்டம் ஹூண்டாய் நிறுவனத்திடம் உள்ளதாம்.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்பு

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த அடுத்த தலைமுறை ஐஎக்ஸ்25 மாடலும் முந்தைய மாடலை போல பிஎஸ்6-ற்கு இணக்கமான என்ஜினுடன் வெளியாகவுள்ளது. இக்காரின் 1.5 லிட்டர் என்ஜின் அமைப்புகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன் அறிமுகமான கியா செல்டோஸ் மாடலில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய மார்க்கெட்டிற்கும் ஏற்றாற்போல் இருக்க வேண்டும் என்பதற்காக 1.6 லிட்டர் என்ஜினிற்கு பதிலாக சீனா மார்கெட்டில் 1.5 லிட்டர் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் என்ஜின்களில் இந்தியாவில் களமிறங்கவுள்ள நியூ க்ரெட்டா, செல்டோஸ் ஜிடி வகைகளை போல பிஎஸ்6-ற்கு இணக்கமான 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடனும் அறிமுகமாகவுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டையும் லேசான கலப்பினத்துடன் உபயோகிக்கும் வசதியையும் இந்தியாவில் வெளியாகும் போது ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் ஏற்படுத்தி தர போகிறது.

நியூ ஹூண்டாய் ஐஎக்ஸ்25 (க்ரெட்டா)... இந்திய அறிமுக விபரங்கள் வெளியீடு

2020 பிப்ரவரியில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தால் அறிமுகமாகவுள்ள இந்த நியூ க்ரெட்டா கார், தற்போது இங்கு விற்பனையில் கொடிக்கட்டி பறந்து வரும் கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டார், டாடா ஹெரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ரெனால்ட் கேப்சர் மற்றும் நிஷான் கிக்ஸ் போன்ற கார்களுடன் விற்பனையில் கடும் போட்டி போட்ட வேண்டும்.

Most Read Articles
English summary
2020 Hyundai Creta (ix25) Specs And Features Revealed Ahead Of India Launch
Story first published: Thursday, October 10, 2019, 16:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X