இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

புதிய சன்ரூப் டிசைனுடன் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஹூண்டாய் ஐ20 காரின் மூன்றாம் தலைமுறை மாடலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. வெளியாகியுள்ள இதன் சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தில் ஹேட்ச்பேக் மாடல் ஒன்றும் விரைவில் வெளியாகவுள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

முன்புற பம்பர், க்ரில், ஹாலோஜன் ஹெட்லேம்ப்ஸ், ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், அலாய் சக்கரங்கள், அகலமான ஓஆர்விஎம் மற்றும் பின்புற டிஸ்க் ப்ரேக்குகள் போன்றவை முற்றிலும் புதிய வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

மேலும் ஹூண்டாய் ஐ20 மாடலில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பெரிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் ஹூண்டாயின் ப்ளூலிங்க் உடன் இணைக்கப்பட்ட தொழிற்நுட்பம் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்6-க்கு இணைக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ20 மாடல் அறிமுகமான பின்பு மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற இதன் வகையில் உள்ள கார்களுடன் கடுமையாக போட்டியிட வேண்டும்.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐ20 மாடல் மூன்று பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் ஒரு டீசல் வேரியண்ட்டில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 1.2 லிட்டர் என்ஜினுடனும், டீசல் மாடல் 1.4 லிட்டர் என்ஜினுடன் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. தற்போதைய ஹூண்டாய் ஐ20 மாடல் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.7.74 லட்சத்தில் இருந்து ரூ.9.33 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

ஹூண்டாய் நிறுவனம் ஐ20-ன் முதல் தலைமுறையான சூப்பர்மினி கார்களை கடந்த 2008ல் இருந்து தயாரித்து வருகிறது. முதன்முதலாக 2008ல் பாரிஸில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் அறிமுகமான இந்த கார் உலகம் முழுவதும் மூன்று மற்றும் ஐந்து கதவு வெர்சன்களில் விற்கப்பட்டு வருகிறது.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

கடந்த 2014ல் அறிமுகமான ஐ20-ன் இரண்டாம் தலைமுறை மாடல் 2015ல் 2015ஆம் ஆண்டிற்கான இந்திய கார் ஆப் தி இயர் விருதையும் வென்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் 'திரவ சிற்பம் 2.0' என்கிற டிசைன் தத்துவத்தின்படி ஜெர்மனியில் இந்த ஐ20-ன் இரண்டாம் தலைமுறை கார் உருவாக்கப்பட்டது. இதன் 10 வேரியண்ட்களும் 2018ல் இந்தியாவில் அறிமுகமான போது பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டன.

இதுவரை பார்த்திராத டிசைனில் சன்ரூப்பை ஐ20 மாடலில் வழங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனம்...

ஐ20 மாடலின் இந்த மூன்றாவது தலைமுறையில் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே ஹூண்டாய் நிறுவனம் புதிய டிசைனில் சன்ரூப்பை கொடுத்துள்ளது. பல முன்னணி நிறுவனங்களில் கூட தங்களது மாடல்களில் டாப் வேரியண்ட்டில் மட்டுமே சன்ரூப்பை வழங்கி வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இவ்வாறு குறைந்த விலை மாடலில் சன்ரூப்பை வழங்கியிருப்பது வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2019, 12:47 [IST]
English summary
Spy Pics: Hyundai i20 To Feature Sunroof, New Alloy Wheels, And More
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+